உயிரிழந்த ராணுவ வீரரின் விதவை மனைவி நிலை தெரியுமா? நெஞ்சை உருகவைக்கும் பதிவு

Report Print Raju Raju in இந்தியா

புல்வாமா தாக்குதலை தொடர்ந்து அதற்கு பழிவாங்க வேண்டும் என்றும், போர்தான் ஒரே தீர்வு என்றும் சமூக ஊடகங்களில் பலர் பதிவிடுகிறார்கள்

ஆனால், போர் என்பது அவ்வளவு எளிதான ஒன்றல்ல, ஒரு ராணுவ வீரரின் வலியை தனது பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார் மேஜர் டி.பி.சிங்.

அதில், நாங்கள் உங்களுடன் இருக்கிறோம். நாங்கள் ராணுவ வீரர்களுடனும் அவர்களின் குடும்பத்தினருடனும் துணை நிற்கிறோம். இந்த கொடூரமான தாக்குதலுக்கு பழிவாங்கியே தீர வேண்டும்.

இப்படி கூறுகிறவர்கள் சில நாட்களுக்கு பிறகு தங்கள் வேலைகளை பார்க்க சென்றுவிடுவர்.

அரசியல் கட்சியோ, ஊடகங்களோ, அல்லது பொது மக்களோ யாராக இருந்தாலும் ஓர் உயிரை இழக்கும் வலியையோ அல்லது கை கால்களை இழக்கும் வலியையோ உணரப்போவதில்லை.

ஒரு சிப்பாய் சிரித்துக் கொண்டே தனது வாழ்க்கையை இந்த நாட்டிற்காகவும், நமது தேசியக் கொடிக்காகவும் அர்பணிக்க பயிற்றுவிக்கப்படுகிறான்.

இன்று காலை ஒரு விவாத நிகழ்ச்சிக்காக நான் ஒரு செய்தி தொலைக்காட்சிக்கு சென்றிருந்தேன்.

அந்த தொலைக்காட்சி தொகுப்பாளர், நீங்கள் புல்வாமாவின் புகைப்படங்களை பார்க்கவில்லை என்று நினைக்கிறேன். அதனால்தான் பழிவாங்கலே இதற்கான தீர்வு என்று நான் கூறுவதை நீங்க ஒப்புக் கொள்ள மறுக்கிறீர்கள் என்று சொன்னார்.

ஆனால், நான் சமீபத்தில் நடந்த போர் ஒன்றில் காயமடைந்த ராணுவ மேஜர் என்று அவருக்கு தெரிந்திருக்கவில்லை.

45 குடும்பங்கள் அழிக்கப்பட்டுவிட்டன, நாம் தீர்வு காணவில்லை என்றால் இன்னும் பல குடும்பங்கள் அழிந்துபோகும்.

பழிவாங்க வேண்டும் என்று கூறுவதற்கு முன்னால், ராணுவத்தினரின் குடும்பங்களிடம் கேளுங்கள். அவர்களின் பெற்றோரிடமும், மனைவியிடம், பிள்ளைகளிடம் கேளுங்கள் அவர்களின் ஹீரோ அவர்களுடன் இல்லை என்றால்? அதற்கு அவர்கள் தயாரா என்று?

ராணுவ வீரர் உயிரிழக்க வேண்டும் என்று நாம் நினைக்கிறோம் ஆனால் அவரின் விதவை மனைவி நிலை தெரியுமா? அவருக்கு கிடைக்க வேண்டிய ஓய்வூதிய தொகைக்காகவும், நியாயமான சலுகைக்காகவும் அலைந்து திரிய வேண்டும்.

சில இடங்களில் ராணுவ வீரரின் உடல் கிடைக்கவில்லை என்றால் அவரின் மனைவி அதை நிரூபிக்க வேண்டும். ஓய்வூதியம் கிடைக்க வேண்டும் என்றால் அவரின் உடலை கொண்டுவர வேண்டும்.

நீதிமன்றத்தில் நான் போரில் காயமடைந்தவன் என்பதை நிரூபித்து எனக்கு கிடைக்க வேண்டிய ஓய்வூதியத்தை பெற ஏழு வருடங்கள் ஆனது.

இம்மாதிரியான 1000 வழக்குகள் நீதிமன்றத்தில் உள்ளன. ராணுவத்தினரும், சிஆர்பிஎஃபும் என்ன செய்ய வேண்டும்? எப்போது செய்ய வேண்டும்? என்று அவர்களுக்கு தெரியும்.

தயவுசெய்து அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் கூற வேண்டாம். சூழ்நிலைக்கு தகுந்த நடவடிக்கைகளை அவர்கள் எடுப்பார்கள் என பதிவிட்டுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers