இந்திய வீரர்களின் மரணத்திற்கு மூளையாக செயல்பட்டவன் எங்கு இருக்கிறான்? வெளியான தகவல்

Report Print Deepthi Deepthi in இந்தியா

காஷ்மீரிவ்ல ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தை சேர்ந்த பயங்கரவாதி நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டார்கள்.

இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் அப்துல் ராஷீத் என்பவர் என புலனாய்வு விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஆப்கானில் பயங்கரவாத இயக்கத்தில் பணியாற்றியவன், வெடிப்பொருட்களை தயார் செய்வதில் சிறப்பு திறன் பெற்றவன் என கூறப்படுகிறது.

அவன் இப்போதும் காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில்தான் உள்ளான் எனவும் பாகிஸ்தானில் இருந்து டிசம்பர் 9-ம் தேதி ஊடுருவி, புல்வாமா பகுதியில் தங்கியிருந்துள்ளான் என பாதுகாப்பு படைகள் தெரிவித்துள்ளன.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்