தாக்குதலுக்கு மூளையாக இருந்த தீவிரவாதி சுட்டு கொலை: உயிரிழந்த ராணுவ வீரர் மனைவி என்ன சொன்னார் தெரியுமா?

Report Print Raju Raju in இந்தியா

தமிழர்கள் உட்பட 45 பேரை கொன்ற சம்பவத்தில் மூளையாக செயல்பட்ட தீவிரவாதி அப்துல் ரஷீத் கொல்லப்பட்டதற்கு, இறந்த ராணுவ வீரரின் மனைவி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

கடந்த 14-ஆம் திகதி புல்வாமாவில் நடந்த தற்கொலை படை தாக்குதலில் 45 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதலை அடில் அகமது என்ற தீவிரவாதி நடத்தினான்.

அடில் அகமதுக்கு அப்துல் ரஷீத் என்ற தீவிரவாதி தான் இதற்கான பயிற்சியை கொடுத்ததுடன், இதற்கு மூளையாகவும் செயல்பட்டுள்ளான்.

இந்நிலையில் ராணுவத்தினர் அப்துல் ரஷீத்தை நேற்று சுட்டு கொன்றனர். உயிரிழந்த 45 ராணுவ வீரர்களில் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த குரு என்பவரும் அடக்கமாவார்.

கணவர் இறந்ததால் கதறி துடித்த குருவின் மனைவி கலாவதி இது குறித்து பேசியுள்ளார்.

கலாவதி கூறுகையில், தீவிரவாத தாக்குதலுக்கு சூத்திரதாரியாக இருந்தவர்கள் கொல்லப்பட்டது மகிழ்ச்சியளிக்கிறது.

நம்முடையை பாதுகாப்பு படையினரை நினைத்தால் பெருமையாக உள்ளது.

தீவிரவாதிகள் அனைவரையும் ஒழிக்கும் வரை ராணுவ வீரர்களின் நடவடிக்கைகள் தொடரவேண்டும் என கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers