தீவிரவாதிகளின் தாக்குதலால் உயிரிழந்த இராணுவ வீரர்களுக்கு SBI வங்கி செய்த நெகிழ்ச்சி உதவி! குவியும் பாராட்டு

Report Print Santhan in இந்தியா

இந்தியாவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் காரணமாக 40-க்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் பலியாகியிருந்த நிலையில், அவர்களில் 23 பேர் வங்கியில் கடன் பெற்றிருந்ததால், அவர்களின் கடன்களை அரசு வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா அவர்களின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் அறிவித்துள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் அவந்திபோரா நெடுஞ்சாலையில் கடந்த வியாழக்கிழமை துணைஇராணுவவீரர்கள் சென்று கொண்டிருந்த பேருந்தின் மீது தீவிரஜெய்ஷ் இ முகமது அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதி நடத்திய தாக்குதலில் 40-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக பலியாகினர்.

நாட்டிற்காக வீரமரணம் அடைந்த வீரர்களின் குடும்பங்களுக்கு பல்வேறு இடங்களிலிருந்து உதவிகள் வந்து கொண்டிருக்கின்றன.

அந்த வகையில் 40 வீரர்களில் 23 வீரர்கள் எஸ்.பி.ஐ. வங்கியில் கடன் பெற்றிருந்தனர். அவர்கள் பெற்றிருந்த கடன் அனைத்தையும் உடனடியாக தள்ளுபடி செய்வதாக எஸ்பிஐ வங்கி அறிவித்துள்ளது.

இது குறித்து எஸ்பிஐ வங்கியின் தலைவர் ரஜ்னிஷ் குமார் கூறுகையில், "புல்வாமா தாக்குதலில் கொல்லப்பட்ட துணைஇராணுவ வீரர்களில் 23 பேர் எங்கள் வங்கியின் வாடிக்கையாளர்கள். அவர்கள் எங்கள் வங்கியில் பெற்றுள்ள அனைத்து கடன்களையும் உடனடியாக தள்ளுபடி செய்கிறோம்.

அதுமட்டுமின்றி அவர்கள் வாடிக்கையாளர்கள் என்பதால், அவர்களுக்கு காப்பீடுத் தொகையாக வீரர்கள் ஒவ்வொருவரின் குடும்பத்தினருக்கும் 30 லட்சம் இழப்பீடு வழங்க இருக்கிறோம்.

நாட்டின் பாதுகாப்புக்காகச் சென்று உயிர்நீத்த வீரர்கள் நிலை வேதனையளிக்கிறது. அவர்களின் குடும்பத்தினரை காக்க வேண்டியது அனைவரின் கடமை.

வீரர்களை இழந்து தவித்து வரும் குடும்பத்தினருக்கு எங்கள் வங்கியின் மூலம் சிறிய உதவியாக இதை செய்கிறோம் என்று கூறியுள்ளார்.

மேலும், எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் துணை இராணுவவீரர்களுக்கு உதவ விருப்பம் இருந்தால், bharatkeveer.gov.in என்ற இணையதளத்தில் நிதியை நேரடியாக அளிக்கலாம் என கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers