பாரளுமன்ற தேர்தலுக்கான அதிமுக கூட்டணி முடிவானது: வெளியான அறிவிப்பு

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தில் அதிமுக - பா.ம.க இடையிலான தேர்தல் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் வரும் பாராளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தைகள் தமிழகத்தில் தொடங்கியுள்ளன.

தமிழகத்தின் ஆளும் கட்சி அதிமுகவுடன் பா.ஜ.க கூட்டணி வைப்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

இதையடுத்து ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் இன்று தமிழகம் வந்து அதிமுக தலைவர்களுடன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

இதனிடையில் அதிமுக - பா.ம.க கூட்டணி தற்போது உறுதியாகியுள்ளது.

சென்னை அடையாற்றில் உள்ள நட்சத்திர ஹொட்டலில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி - பாமக நிறுவனர் ராமதாஸ் சந்திப்பு நடந்து வருகிறது.

இதில் இருகட்சி கூட்டணி கையெழுத்தாகியுள்ளது. பா.ம.கவுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

தர்மபுரி, ஆரணி, அரக்கோணம், சிதம்பரம், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, கடலூர் ஆகிய 7 தொகுதிகள் பாமகவுக்கு ஒதுக்கப்படலாம் என தெரிகிறது.

இதன் காரணமாக தமிழகத்தின் வட மாவட்டங்களில் அதிமுக கூட்டணி பலமடைந்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers