44 வீரர்கள் மீதான தாக்குதலுக்கு பயன்படுத்திய வெடிமருந்து குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்: பாகிஸ்தானுக்கு நேரடி தொடர்பு?

Report Print Deepthi Deepthi in இந்தியா

புல்வாமா தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட வெடிமருந்துகள் பாகிஸ்தான் இராணுவத்தினர் பயன்படுத்தும் வெடிமருந்துகள் என என்.ஐ.ஏ விசாரணையில் தெரியவந்துள்ளது.

தாக்குதல் நடத்தப்பட்ட இடத்தில் சிதறியிருந்த ஆர்டிஎக்ஸ் வெடிமருந்துகளை சோதனை செய்ததில் அந்த வெடிமருந்துகள் மிகவும் சக்தி வாய்ந்தவை என்றும் அவை பாகிஸ்தான் இராணுவத்தினர் பயன்படுத்துவது என தெரியவந்துள்ளது.

எனினும் இதுபற்றி விரிவாக ஆய்வுக்கு வெடிமருந்துகள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

புல்வாமா தாக்குதல் பாகிஸ்தானுக்கு நேரடி தொடர்பு இருப்பதாக என்.ஐ.ஏ விசாரணையில் தெரியவந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே கடந்த 3 நாட்களில் மட்டும் 300க்கு மேற்பட்ட கல்லூரி மாணவர் ஜம்மு மற்றும் டெல்லிக்கு இடம்பெயர்ந்தனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers