100 மணி நேரத்தில் தலைமையை ஒழித்த இந்திய இராணுவம்: ஓயமாட்டோம் – தாய்மார்களுக்கு வேண்டுகோள்

Report Print Abisha in இந்தியா

புல்வாமா தாக்குதலுக்கு காரணமான பயங்கரவாதிகளை 100மணி நேரத்தில் ஒழித்துகட்டிவிட்டோம் என்று இந்திய இராணுவம் அறிவித்துள்ளது.

சமீபத்தில் காஷ்மீரின் புல்வாமாவில் சி.ஆர்.பி.எப் ராணுவ வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதில் 40க்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்திய இராணுவத்தின் சார்பில், அப்பகுதியில் என்கவுன்ட்டர் வேட்டை தொடங்கப்பட்டது. இதில் புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தளபதி கம்ரான் உள்ளிட்ட முக்கிய புள்ளிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இதையடுத்து இன்று செய்தியாளர்களை சந்தித்த ராணுவ உயர் அதிகாரிகள் ‘புல்வாமா தாக்குதல் நடந்த 100 மணி நேரத்துக்குள் ஜெய்ஷ் இ-முகமது அமைப்பின் தலைமையை ஒழித்துக் கட்டிவிட்டோம்' என்று கூறினர்.

மேலும் ‘நாங்கள் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைமையில் யாரெல்லாம் இருக்கிறார்கள் என்பது குறித்து விசாரித்து வந்தோம். காஷ்மீரில் அந்த அமைப்புக்கு இருந்த தலைவர்கள் அனைவரையும் ஒழித்துகட்டி விட்டோம்' என்று கூறினர்.

தொடர்ந்து பேசிய அவர்கள், காஷ்மீரில் இருக்கும் தாய்மார்களுக்கு ஒன்றைச் சொல்லிக் கொள்ள நினைக்கிறோம். உங்கள் மகன், ஆயுதம் ஏந்தியிருந்தால், அதை உடனடியாக துறக்கச் சொல்லுங்கள். இங்கு இருக்கும் கடைசி தீவிரவாதியை கொல்லும் வரை நாங்கள் ஓயமாட்டோம்' என்று தாய்மார்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers