உறவினரை வீட்டில் நம்பி தங்கவைத்த கணவன்: செய்த துரோகத்தால் நடந்த அதிர்ச்சி சம்பவம்

Report Print Raju Raju in இந்தியா

இந்தியாவில் கணவரை தனது உறவினருடன் சேர்ந்து கொலை செய்துவிட்டு நாடகமாடிய மனைவி கைது செய்யப்பட்டுள்ளார்.

மகாராஷ்டிர மாநிலத்தின் பல்கர் நகரை சேர்ந்தவர் அனில்குமார் (32). இவர் மனைவி மம்தா.

இந்நிலையில் தனது கணவரை கடந்த 13ஆம் திகதியிலிருந்து காணவில்லை என பொலிசில் மம்தா கடந்த 15ஆம் திகதி புகார் செய்தார்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த பொலிசார் அனில்குமாரை தேடி வந்த நிலையில் அங்குள்ள காட்டு பகுதியில் அனில்குமாரை சடலமாக கண்டெடுத்தனர்.

அவர் உடலில் காயங்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து பொலிசாரின் சந்தேகம் மம்தா பக்கம் திரும்பியது.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கணவர் எப்படி இறந்தார் என்று தனக்கு தெரியாது என முதலில் கூறினார்.

பின்னர் நடத்தப்பட்ட கிடுக்குபிடி விசாரணையில், கணவர் அனில்குமாரை தனது காதலர் சோனுவுடன் சேர்ந்து கொன்றதை மம்தா ஒப்பு கொண்டார்.

பொலிசார் கூறுகையில், தனது உறவினரான சோனுவை தனது வீட்டில் தங்க அனுமதி கொடுத்துள்ளார் அனில்குமார்.

அப்போது சோனுவுக்கும், மம்தாவுக்கும் தொடர்பு ஏற்பட்டது. இதை கண்டுப்பிடித்த அனில்குமார் மனைவியுடன் சண்டை போட்டுள்ளார்.

அப்போது உடனிருந்த சோனு அனில்குமாரை கனமான பொருளை கொண்டு தலையில் தாக்கியுள்ளார்.

இதில் அவர் உயிரிழந்தார். பின்னர் இருவரும் சேர்ந்து அனில்குமார் சடலத்தை காட்டுப்பகுதிக்கு கொண்டு சென்று அங்குள்ள புதரில் தூக்கி வீசியது தெரியவந்துள்ளது.

இதையடுத்து பொலிசார் சோனு மற்றும் மம்தாவை கைது செய்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers