தீவிரவாதியால் கணவனை பறிகொடுத்து விதவையான பெண்ணிற்கு தேடி வந்த பொலிஸ் வேலை: ஆனால் அவர் கேட்டது என்ன தெரியுமா?

Report Print Santhan in இந்தியா

தீவிரவாதிகளின் தாக்குதலினால் கணவனை பறிகொடுத்து விதவையாக இருக்கும் பெண்ணிற்கு கேரள அரசு பொலிஸ் வேலை தருவதாக அறிவித்துள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நடந்த தாக்குதல் காரணமாக 40-க்கும் மேற்பட்ட துணை இராணுவ வீரர்கள் நாட்டிற்காக தங்கள் உயிரை தியாகம் செய்துள்ள நிலையில், இறந்த இராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு அந்தந்த மாநில அரசு அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறது.

அந்த வகையில் கேரளாவைச் சேர்ந்த VV Vasanth Kumar புல்மாவா மாவட்டத்தில் நடந்த தாக்குதலில் இறந்தார்.

இதையடுத்து இறந்த இராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு 25 லட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்கப்படும் என்று கேரள அரசு அறிவித்தது.

இந்நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயன், இறந்த வசந்தகுமாரின் வீட்டிற்கு சென்று அவரது மனைவி மற்றும் தாயை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார்.

அப்போது மனைவியான ஷீனாவிற்கு ஆர்வம் இருந்தால் பொலிஸ் வேலை கொடுப்பதாகவும், அதிலும் சப்-இன்ஸ்ப்க்டர் போஸ்டிங் தருவதாகவும் கூறியுள்ளார்.

ஆனால் ஷீனாவிற்கு இதில் விருப்பமில்லை எனவும் தான் வேலை பார்க்கும் Kerala Veterinary and Animal Sciences University தன்னுடைய வேலையை நிரந்தரபடுத்தி தரும் படி கூறியுள்ளார்.

ஷீனாவிற்கு Amandeep என்ற 5 வயது மகனும் Anamika என்ற 8 வயது மகளுன் உள்ளனர். இப்போது இவர்கள் கேரளாவின் Lakkidi பகுதியில் சொந்த வீட்டில் தங்கி வருகின்றனர். ஆனால் அந்த வீட்டிற்கும் சில பிரச்சனைகள் இருப்பதாக கூறப்படுகிறது.

ஆனால் முதல்வர் பினராயி விஜயன் இறந்த இராணுவ வீரரின் குடும்பத்திற்கு புதிய வீடு கட்டித் தர தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers