புல்வாமா தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசிய பிரபல நடிகரின் வீடியோ? வெளியான உண்மை தகவல்

Report Print Santhan in இந்தியா

பிரபல திரைப்பட நடிகரான அக்‌ஷய் குமார் பாகிஸ்தான் தீவிரவாத நாடு அல்ல, இந்தியாவில் தான் தீவிரவாதத்துக்கான கூறுகள் உள்ளது என்று அவர் கூறியதாக வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், அதன் உண்மை நிலை என்ன என்பது குறித்து தற்போது தெரியவந்துள்ளது.

இந்தியாவின் ஜம்முகாஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் தமிழர்கள் இரண்டு பேர் உட்பட 40-க்கும் மேற்பட்ட துணை இராணுவ வீரர்கள் பரிதாபமாக பலியாகியதால், தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பதே பாகிஸ்தான் தான் என்ற குற்றச்சாட்டு நிலவி வருகிறது.

இந்நிலையில் இந்தியாவைச் சேர்ந்த பிரபல நடிகர் அக்‌ஷய்குமார், பாகிஸ்தான் தீவிரவாத நாடு அல்ல, இந்தியாவில் தான் தீவிரவாதத்துக்கான கூறுகள் உள்ளன என கூறியிருப்பதாக கூறி, டுவிட் ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் புல்வாமா தாக்குதலுக்கு பிறகு துன்யா நியூஸ் எனும் பாகிஸ்தான் செய்தி சேனலும் இந்த செய்தியை வெளியிட்டது.

அக்ஷய்குமார் பயங்கரவாத நாடுகள் பட்டியலில் பாகிஸ்தானின் பெயரை தவிர்த்திருக்கிறார் என்றும் உலகம் முழுவதும் பயங்கரவாதம் வியாபித்திருக்கிறது என்றும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் அதன் உண்மை என்ன என்பது பற்றி பார்த்த போது, அந்த வீடியோ கடந்த 2015-ஆம் ஆண்டு பேபி எனும் திரைப்படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்வில் அப்போது பேசிய வீடியோ என்பது தெரியவந்துள்ளது.

அதில், அவர் பயங்கரவாதம் எந்த நாட்டிலும் இல்லை. அதன் கூறுகளே இருக்கின்றன. அவை இந்தியா, அமெரிக்கா, அவுஸ்திரேலியா , பாரிஸ் மற்றும் பெஷாவரில் இருக்கின்றன.

மக்களில் சிலர் பயங்கரவாதத்தை பரப்புகிறார்கள் ஆனால் எந்த நாடும் அதற்கு ஆதரவளிப்பதில்லை என கூறியுள்ளார்.

ஆனால் அதை இப்படி யாரோ பரப்பிவிட்டார்கள். புல்வாமா தாக்குதலுக்கு பின் அக்‌ஷய் குமார் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், உயிரிழந்த வீரர்களின் குடும்பத்துக்கு பாரத் கீ வீர் எனும் நிவாரண நிதி திரட்டும் திட்டத்துக்கு மக்கள் தங்களது பங்களிப்பை வழங்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers