வலியை பொறுத்துக்கொண்டு தன்னை கடித்த பாம்பை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற முதியவர்: இப்படியும் ஒரு புத்திசாலித்தனம்

Report Print Deepthi Deepthi in இந்தியா

கடலூர் மாவட்டத்தை சேர்ந்த ரங்கநாதன் என்பவர் தனது விளைநிலத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்தபோது பாம்பு ஒன்று கடித்துள்ளது.

பாம்பு கடித்த வலியை பொறுத்துக்கொண்டு , அந்த பாம்பை பிடித்து ஒரு பையில் போட்டு எடுத்துக்கொண்டு சிகிச்சைக்கு சென்றுள்ளார்.

இரண்டு அடி நீளமுள்ள ஒரு நல்லபாம்பு நெளிந்து கொண்டிருந்ததைப் பார்த்து மருத்துவமனையில் இருந்த இரண்டு நோயாளிகள் அலறி அடித்துக்கொண்டு ஓடியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து பாம்பின் விஷத்தன்மையை அறிந்து விவசாயி ரங்கநாதனுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்துள்ளனர்.

அதன்பிறகு அந்த நல்லபாம்பை அருகில் உள்ள வனப்பகுதிக்குள் மருத்துவமனை ஊழியர்கள் விட்டுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers