வெளிநாட்டிலிருந்து காதலியை மணக்க ஊருக்கு வந்த இளைஞர்: திருமண நாளில் காத்திருந்த அதிர்ச்சி

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தில் காதல் திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்துவிட்டு திருமண நேரத்தில் மகளை தந்தை கடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கும்பகோணத்தை சேர்ந்தவர் சதீஸ் (26). சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார்.

அதே ஊரை சேர்ந்தவர் ரவி. இவரது மகள் சுபசக்தி (24).

சதீசும், சுபசக்தியும் கடந்த 8 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களது காதலுக்கு இருவீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே காதலியை எப்படியாவது திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில் சிங்கப்பூரில் இருந்து சதீஸ் ஊருக்கு வந்துள்ளார்.

இதையடுத்து காதலியின் தாயிடம் பேசி திருமணத்துக்கு சம்மதம் பெற்றுள்ளார். இருவரும் பதிவு திருமணம் செய்து கொள்ள சுபசக்தியின் தாய் மாதவி ஒப்புகொண்டார்.

பின்னர் எப்படியோ இருவீட்டார் சம்மதத்தின் பேரில் காதல் ஜோடிக்கு அங்குள்ள கோவிலில் நேற்று திருமணம் நடைபெறுவதாக இருந்தது.

அதன்பேரில் திருமண ஏற்பாடுகள் தடபுடலாக நடந்து வந்தது. இந்நிலையில் 19-ந் திகதி இரவு மணமகளான சுபசக்தி வரவில்லை.

அப்போது சதீசுக்கு போன் செய்த சுபசக்தி, தனது தந்தை திடீரென திருமணத்துக்கு ஒப்புக் கொள்ள மறுத்து தன்னை கடத்தி சென்று தனி அறையில் வைத்துள்ளதாக கூறினார்.

இதையடுத்து சுபசக்தியின் தந்தை ரவிக்கு போன் செய்த சதீஸ் இது பற்றி கேட்டபோது, தனது மகளை திருமணம் செய்ய வேண்டுமானால் பணம் தரவேண்டும் என்று அதிக தொகை கேட்டதால் சதீஸ் அதிர்ச்சியடைந்தார்.

இதையடுத்து நேராக காவல் நிலையம் சென்ற சதீஸ், நடந்தவற்றை கூறி தனக்கு சுப சக்தியுடன் திருமணம் நடத்தி வைக்க கோரினார்.

இதன்பேரில் வழக்குப்பதிவு செய்த பொலிசார் சுபசக்தியின் பெற்றோரிடம் விசாரித்து வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்