மனைவி மது போதையில் அட்டூழியம் செய்கிறார்... விவாகரத்து வேண்டும்.. பிரபல நடிகர் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ

Report Print Raju Raju in இந்தியா

பிரபல சீரியல் நடிகர் ராஜேஷ் துருவா மற்றும் அவர் மனைவி ஸ்ருதி ஆகியோர் ஒருவர் மீது ஒருவர் பொலிசில் புகார் கொடுத்த நிலையில் ஸ்ருதி, மது அருந்தும் வீடியோவை ராஜேஷ் வெளியிட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னட சீரியல் நடிகர் ராஜேஷ் துருவாவும், ஸ்ருதி என்ற பெண்ணும் கடந்த 2013-ல் காதல் திருமணம் செய்து கொண்டனர்.

சில வருடங்களில் இருவருக்கும் இடையில் மனக்கசப்பு ஏற்பட்ட நிலையில் இருவரும் சில காலம் பிரிந்து வாழ்ந்தனர்.

இந்நிலையில் இருவரும் ஒருவர் மீது ஒருவர் பொலிசில் புகார் அளித்துள்ளனர்.

தன் மீது ஸ்ருதி வீண் பழி சுமத்துவதாக கூறிய ராஜேஷ், தனது மனைவி மது போதையில் அட்டூழியம் செய்வதாக கூறி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

முதலில் ஸ்ருதி அளித்த புகாரில், ராஜேஷும் அவர் அம்மாவும் என்னை ரூபாய் 3 லட்சம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தினார்கள்.

அவர் சீரியலில் நடிக்க தொடங்கிய போது நான் தான் உதவியாக இருந்தேன்.

ஆனால் ராஜேஷுக்கு வேறு பெண்ணுடன் தொடர்பு உள்ளது, அவரோடு ரகசிய வாழ்க்கை வாழ்கிறார்.

மேலும் ராஜேஷுக்கு இரண்டாம் திருமணம் செய்துவைக்க அவர் அம்மா முயல்கிறார் என குறிப்பிட்டிருந்தார். இது குறித்து ராஜேஷிடம் பொலிசார் ஒன்றரை மணி நேரம் விசாரித்தனர்.

அவர் கூறுகையில், என்னையும், என் அம்மாவையும் ஸ்ருதி மனரீதியாக துன்புறுத்தினார்.

நான் ஏற்கனவே விவாகரத்து கேட்டு ஸ்ருதிக்கு மனு அளித்தேன், ஆனால் அவர் அதற்கான பதிலை இன்னும் வழங்கவில்லை.

நான் வரதட்சணை கொடுமை செய்ததாக கூறும் ஸ்ருதியிடம் ஆதாரம் உள்ளதா? எனக்கு வேறு பெண்ணுடன் தொடர்பு கிடையாது.

வேண்டுமென்றே என் மீது பழிசுமத்துகிறார் என தெரிவித்துள்ளார். பொலிசார் தொடர்ந்து இது குறித்து விசாரித்து வருகிறார்கள்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்