திருமணமான நபரை காதலித்த பெண்ணிற்கு நேர்ந்த கதி! போதை பொருள் கொடுத்து என கண்ணீர் விடும் கெளசல்யா

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் நட்சத்திர ஹோட்டலுக்கு சென்ற கெளசல்யா என்ற பெண்னை ஐஸ்கிரீம் பார்லர் உரிமையாளர் தாக்கியதாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

கோயமுத்தூரைச் சேர்ந்தவர் கெள்சல்யா. டிப்ளோமோ இன்ஜினியரான இவர் சென்னை தேனாம் பேட்டை காவல்நிலையத்தில் ஐஸ்கிரீம் உரிமையாள் மீது புகார் மனு ஒன்றை அளித்திருந்தார்.

இதையடுத்து இது குறித்து அவரிடம் கேட்ட போது, நான் டிள்ளோமா இன்ஜினியரிங் முடித்துவிட்டு சென்னைக்கு வேலை தேடி வந்தேன்.

அதன் பின் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை கிடைத்தது. அப்போது நண்பர்கள் மூலம் மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் ஐஸ் கிரீம் பார்லர் நடத்திவரும் அசன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

அதன் பின் இருவரும் காதலித்தோம். அந்த சமயத்தில் தான், அவர் எனக்கு போதை பொருள்களை கட்டாயப்படுத்திக் கொடுத்தார்.

இதனால் என் வாழ்கையே கேள்வி குறியானதால், அவரை விட்டு பிரிந்து சென்றேன்.

இந்நிலையில் கடந்த 24-ஆம் திகதி, தேனாம்பேட்டை பகுதியில் உள்ள நட்சத்திர ஹோட்டலுக்கு தோழியின் பிறந்தநாள் விழாவுக்காகச் சென்றிருந்தேன்.

அங்கு அசனும் வந்திருந்தார். அப்போது அவருக்கும் எனக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது அவர் என்னை ரெஸ்ட் ரூம் பகுதிக்கு அழைத்துச் கண்மூடித்தனமாக தாக்கினார்.

தன்னிடம் இருந்த செல்போனை அவர் உடைத்து, என்னை தொடர்ந்து அடித்ததால், மூக்கில் இரத்தம் வந்தது. இதனால் அருகில் இருக்கும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றேன்.

எனக்கு நடந்த கொடுமைகளைக் குறித்து தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளேன். ஆனால் காவல்துறையினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதுவரை மனு ஏற்புச் சான்றிதழ்கூட கொடுக்கவில்லை. எனக்கு நீதி வேண்டும். எனக்கு போதை பொருள் கொடுத்து என் வாழ்க்கையைக் கேள்விக் குறியாக்கிவிட்டார். நான் மட்டுமல்ல என்னைப் போல சில பெண்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். அசனுடன் பழகியபோதுதான் அவர் போதை பொருள்களை கொடுத்து சில பெண்களை ஏமாற்றுவது எனக்குத் தெரியவந்தது.

அவருக்கு திருமணமாகி குழந்தையும் இருக்கிறது. அதன்பிறகுதான் அவரைக் காதலித்தேன். ஆனால், என்னையும் அவர் திருமணம் செய்துகொள்வதாக முதலில் ஆசைவார்த்தை கூறினார். ஆனால், அதன்பிறகு அவர் என்னை ஏமாற்றிவிட்டார் என்று கூறியுள்ளார்.

இது குறித்து அசனிடம் கேட்ட போது, அவர் தான் போதைக்கு அடிமையானவர், என் மீது பழி சுமத்துகிறார். அவரை அவரின் நண்பரிடம் கேளுங்கள் சுயரூபம் தெரியும் என்று கூறி முடித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்