இந்திய ராணுவத்தின் குண்டுமழையில் எத்தனை பேர் கொல்லப்பட்டனர்... உண்மை நிலவரம் என்ன? வெளியான பகீர் தகவல்

Report Print Arbin Arbin in இந்தியா

பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் பயங்கரவாதிகள் முகாம் மீது இந்திய ராணுவத்தின் அதிரடி தாக்குதலால் அப்பகுதி மக்கள் அலறியடித்து வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வடகிழக்கு பாகிஸ்தானில் அமைந்துள்ளது பாலகோட் கிராமம். இப்பகுதி உள்ளிட்ட மூன்று இடங்களில் நேற்று அதிகாலை திடீரென்று இந்திய ராணுவம் குண்டுமழை பொழிந்தது.

தூக்கத்தில் இருந்த இப்பகுதி மக்கள் நிலநடுக்கமாக இருக்கலாம் என அலறியடித்தபடி வெளியேறியதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

மட்டுமின்றி இந்திய ராணுவத்தின் தாக்குதலில் ஒரே ஒரு நபருக்கு மட்டும் காயம் ஏற்பட்டுள்ளது எனவும், உயிர் அபாயம் ஏதும் இல்லை எனவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

ஆனால் இந்திய ராணுவம் மற்றும் உள்விவகாரத்துறை வெளியிட்ட தகவலில், சுமார் 200 முதல் 350 பேர் வரை கொல்லப்பட்டதாகவும், பயங்கரவாதிகள் முகாம்கள் முற்றாக அழிக்கப்பட்டது எனவும் தெரிவித்துள்ளனர்.

பாகிஸ்தான் எல்லையையொட்டிய கிராம மக்கள் மட்டுமின்றி, பாகிஸ்தான் ராணுவமும் உயிர் சேதம் குறித்து வெளியான தகவல்களை முற்றாக மறுத்துள்ளது.

மேலும், ஜெய்ஷ் பயங்கரவாத அமைப்பின் பாடசாலை ஒன்று இந்தியா குறிவைத்து தாக்கிய பகுதியில் இருந்து சுமார் ஒரு கி.மீற்றர் தொலைவில் செயல்பட்டு வருவதாகவும்,

அந்த பாடசாலைக்கு எந்த பாதிப்பும் இந்திய ராணுவத்தின் குண்டுமழையால் நேரவில்லை எனவும் அப்பகுதி நபர் ஒருவர் சரவதேச ஊடகத்திடம் தெரிவித்துள்ளார்.

பல ஆண்டுகளாக குறிப்பிட்ட பகுதிகளில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாகவும், இதுவரை எந்த வெளியாட்களும் அந்த பகுதிக்கு செல்ல அனுமதிக்கப்பட்டதில்லை எனவும் அந்த நபர் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers