இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் பதற்றம்... எச்சரித்த பாகிஸ்தான்: மக்களை வெளியேற்றும் இந்திய அரசு

Report Print Deepthi Deepthi in இந்தியா

இந்திய விமானப்படை எல்லை தாண்டி சென்று தீவிரவாத முகாம்கள் தாக்குதல் நடத்தியது.

இதனையடுத்து இந்திய எல்லையில் 55 நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது.

ரஜோரி மாவட்டம் மஞ்சாகோட் செக்டரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி அளித்து வருகிறது. இதனால் எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது.

சோபியான் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியுள்ளதாக வந்துள்ள தகவலை தொடர்ந்து, அங்கு பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

பதுங்கியுள்ள பயங்கரவாதிகளை சுட்டு வீழ்த்தும் பொருட்டு, என்கவுன்டர் நடவடிக்கைகளில், பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டே இந்தியா இப்படி தாக்குதல் நடத்தியுள்ளது என்றும் இந்தியாவுக்கு தக்கநேரத்தில் பதிலடி கொடுக்கப்படும் என எச்சரிகை விடுத்துள்ளார் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்.

இதற்கிடையில் இந்தியா - பாகிஸ்தான் எல்லைப்பகுதி ஒரு பதற்றமான சூழ்நிலையே நிலவி வருவதாக போர் மூளும் ஆபத்து ஏற்பட வாய்ப்பிருக்கிறது என பாகிஸ்தானுக்கான முன்னால் தூதர் தெரிவித்துள்ளார்.

பதற்றமான நிலை தொடர்ந்து நீடித்துக்கொண்டிருந்தால் போர் ஏற்படுவதை தவிர வேறுவழியில்லை என கூறியுள்ளார்.

இந்திய சினிமாக்கள் பாகிஸ்தானில் ரிலீஸ் செய்யப்படாது, இந்திய விளம்பரங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் தொலைத்தொடர்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியா - பாகிஸ்தான் இடையே நிலவும் சூழ்நிலையை கண்காணித்து வருவதோடு, இரு நாடுகளுடனும் இது குறித்து பேசி வருகிறோம்.

இருநாடுகளுக்கு இடையேயான பதட்டத்தை தணிக்கும் வகையிலான நடவடிக்கைகளை எடுப்பதே தற்போது அவசியமாக கருதுகிறோம் என ஐரோப்பிய யூனியன் தெரிவித்துள்ளது.

மேலும் பாகிஸ்தான் எல்லையில் வாழும் மக்களை பாதுகாப்பான இடத்திற்கு மாற்றும் பணியில் தற்போது இந்திய அரசு ஈடுபட்டு வருகின்றது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers