அபிநந்தனை நான் தான் தூக்கி வளர்த்தேன்... எப்படியாவது மீட்டு தாருங்கள்: உறவினர்கள் கண்ணீர்

Report Print Deepthi Deepthi in இந்தியா

பாகிஸ்தானிடம் சிக்கியுள்ள இந்திய விமானியை பத்திரமாக மீட்டு தரவேண்டும் என இந்திய அரசாங்கத்திடம் அவரது உறவினர்கள் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்துள்ளனர்.

விமானி அபிநந்தனை பத்திரமாக மீட்டு வர வேண்டும் என்று பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர். இதற்காக #BringBackAbhinandan என்ற ஹேஷ்டேக் உருவாக்கப்பட்டுள்ளது.

சென்னையை சேர்ந்த அபிநந்தனின் உறவினர் கூறியதாவது, தொலைக்காட்சியில் பார்த்துதான் அபிநந்தன் சிறை பிடிக்கப்பட்டது எனக்கு தெரியவந்தது.

எனது மாமா பையன்தான் அபிநந்தன். சிறு வயதில் இருந்து அவனை நான் தான் தூக்கி வளர்த்தேன்.

அவனுக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர், அவனை பத்திரமாக மீட்டுதாருங்கள் என கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...