கைதாகியிருக்கும் நிலையில் கூட பாகிஸ்தானியரிடம் கெத்தாக பதிலளித்த தமிழக ராணுவ வீரர்!

Report Print Vijay Amburore in இந்தியா

பாகிஸ்தானிய ராணுவ வீரர்களிடம் கைதாகியிருக்கும் நிலையில் கூட, அபிநந்தன் தாய் நாட்டின் ரகசியம் குறித்து தெரிவிக்காமல் தைரியமாக பேசியதற்கு பலரும் பாராட்டி வருகின்றனர்.

பால்கோட் பகுதியில் பயங்கரவாதிகள் முகாமை எல்லை தாண்டி இந்திய ராணுவம் தாக்கியதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் ராணுவம் இன்று இந்திய எல்லைக்குள் புகுந்தது.

இதனை தடுத்து நிறுத்தும் விதத்தில் இந்திய ராணுவ வீரர்கள் செயல்படும் போது எதிர்பாராத விதமாக விமானம் விபத்தில் சிக்கியதால், பாராசூட் மூலம் தப்ப முயன்ற இந்திய வீரர் அபிநந்தன் பாகிஸ்தான் எல்லை அருகே உள்ள கிராமத்தில் தரையிறங்கினார்.

உடனே அவரை பார்த்த பொதுமக்கள் சரமாரியாக தாக்க ஆரம்பித்தனர். அவர்களிடம் இருந்து பத்திரமாக மீட்ட பாகிஸ்தான் ராணுவத்தினர் சிகிச்சை அளித்து, அவர் பத்திரமாக இருப்பதை உறுதிப்படுத்தும் விதமாக வீடியோ ஒன்றினை வெளியிட்டனர்.

அந்த வீடியோவில்,

கேள்வி : உங்களுடைய பெயர் என்ன ?

பதில் :wing Commander அபினந்தன்.

கேள்வி : நாங்கள் உங்களை நன்றாக நடத்தி இருக்கிறோம் என்று நம்புகிறோம்.

பதில் : கண்டிப்பாக நன்றாக கவனித்தீர்கள். ஒரு வேளை நான் இந்தியா திரும்பினாலும் நான் என்னுடைய இந்த பதிலை மாற்ற மாட்டேன். பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் என்னை அந்த கும்பலிடம் இருந்து மீட்டனர்.அவர்களுக்கும் என்னை பாதுகாப்பாக அழைத்து வந்து உரிய மரியாதை கொடுத்த அனைவருக்கும் நன்றி என்றார். இதே போன்று தான் எங்களுடைய இந்திய இராணுவமும் உங்களை மரியாதையோடு நடத்தி இருக்கும் என்றார்.

கேள்வி : நீங்கள் இந்தியாவின் எந்த பகுதியில் இருந்து வருகிறீர்கள் என்று கேட்டார்கள்.

பதில் : என்னால் இதற்கு பதில் அளிக்க முடியும். ஆனால் எந்த இடம் என்று குறிப்பிட்டு நான் சொல்ல மாட்டேன். தென்னிந்தியாவில் இருந்து வருகிறேன் என்று கூறினார் நமது வீரர்.

கேள்வி : உங்களுக்கு திருமணம் ஆகி விட்டதா ?

பதில் : ஆம் sir ஆகி விட்டது.

கேள்வி : நீங்கள் அருந்தும் டீ நன்றாக இருக்கும் என்று நம்புகிறேன் என்றார்.

பதில் : டீ மிகவும் அருமையாக உள்ளது என்றார்.

கேள்வி : நீங்கள் வந்த விமானத்தின் பெயர் என்ன என்றார் ?

பதில் : sorry மேஜர் அதை என்னால் சொல்ல முடியாது.

கேள்வி : உங்களுடைய இலக்கு என்ன ?

பதில் : sorry மேஜர் அதை என்னால் சொல்ல முடியாது. என கூறியுள்ளார்.

இந்த வீடியோ இணையத்தில் வைரலானதை அடுத்து, உயிரே போனாலும் தாய் நாட்டின் ரகசியத்தை சொல்ல மாட்டேன் என்று வீரத்தோடு அங்கு இருக்கும் நீ அல்லவோ இந்தியன் என வெகுவாக பாராட்டின வருகின்றனர்.

அதேசமயம் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல் பத்திரமாக அபிநந்தனை மீட்டுக்கொண்டு வர இந்திய மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers