16 வயதே ஆன பள்ளி மாணவன் மாரடைப்பால் மரணம்: அதிர்ச்சியில் உறைந்த சக மாணவர்கள்

Report Print Raju Raju in இந்தியா

இந்தியாவில் தேர்வு எழுதி கொண்டிருந்த 16 வயது மாணவன் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலத்தின் ஹைதராபாத்தை சேர்ந்தவர் கோபி ராஜூ (16)

பனிரெண்டாம் வகுப்பு மாணவரான இவர் நேற்று தனது ஆண்டு தேர்வை வகுப்பறையில் உட்கார்ந்து எழுதி கொண்டிருந்தார்.

அப்போது திடீரென கீழே சுருண்டு விழுந்தார் கோபி.

இதை பார்த்து பதறிய சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கோபியை தூக்கி கொண்டு மருத்துவமனைக்கு சென்றனர்.

ஆனால் அவர் ஏற்கனவே மாரடைப்பால் உயிரிழந்துவிட்டது தெரியவந்தது.

வெறும் 16 வயதே ஆன மாணவன் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சக மாணவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்