அபிநந்தன் மீசை மீது ஆசைப்பட்ட இளைஞர்கள்

Report Print Deepthi Deepthi in இந்தியா

இந்திய விமானி அபிநந்தனின் மீசை போன்று சிகை அலங்காரம் செய்வதில் இளைஞர்கள் அதிக ஆர்வம் செலுத்தி வருகின்றனர்.

பிரபலங்கள், கிரிக்கெட் நட்சத்திரங்கள், நடிகர்கள் போன்று ஆடை அலங்காரம் மற்றும் சிகை அலங்காரம் செய்துகொள்வதில் இளைஞர்கள் அதிக ஆர்வம் செலுத்துவது வழக்கம்.

இந்நிலையில், இந்திய விமானி அபிநந்தன் இளைஞர்களின் நாயகனாக மாறியுள்ளார்.

முடிதிருத்தும் கடைகளில் அபிநந்தன்மீசை பாணியில் அலங்காரம் செய்துகொள்ள இளைஞர்கள் அதிகம் வருகின்றனர் என கடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அபிநந்தன் போன்று மீசை, தலைமுடி அலங்காரத்தை செய்கிறோம், அவர் எங்களின் உண்மையான ஹீரோ என்றும் அவரது வீரம் எங்களுக்கு பெருமை அளிக்கிறது என கூறியுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்