பெற்ற குழந்தையை வீசியெறிந்து கொலை செய்த தாய்: கணவன் வீட்டுக்கு போக சொன்னதால் ஆத்திரம்

Report Print Deepthi Deepthi in இந்தியா

நாகப்பட்டினம் மாவட்டத்தில் குடும்ப தகராறு காரணமாக பெற்ற குழந்தையை தரையில் வீசி கொலை செய்த தாயை பொலிசார் கைது செய்துள்ளனர்.

ஜெயேந்திரன் - வினோதா தம்பதியினருக்கு 3 மாத குழந்தை உள்ளது. மகப்பேறுக்காக தனது தாய் வீட்டிற்கு சென்ற வினோத 3 மாதமாகியும் அங்கேயே தங்கியிருந்தார்.

3 மாதமாகியும் கணவன் வீட்டுக்கு செல்லாமல் இருப்பது சரியல்ல என வினோதாவை அவரது தாய் திட்டியுள்ளார்.

இதில் ஆத்திரமடைந்த வினோத, தான் பெற்றெடுத்த குழந்தை என்றும் பாராமல் கையில் இருந்த குழந்தையை தூக்கியெறிந்துள்ளார். இதில் படுகாயமடைந்த குழந்தை உயிரிழந்துள்ளது.

தகவல் அறிந்த பொலிசார் குழந்தையின் உடலை மீட்டு தாயின் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்