திருமணத்துக்கு முந்தைய நாள் மணப்பெண் செய்த செயல்: அதிர்ச்சியில் உயிரை விட்ட மணமகன்

Report Print Raju Raju in இந்தியா

இந்தியாவில் திருமணத்துக்கு முந்தைய நாள் மணமகள் காதலருடன் ஓடி போனதால் மனமுடைந்த மணமகன் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

மும்பையை சேர்ந்தவர் சுக்தேவ் ஷயாம்லால் கவாலே. இவருக்கும் இளம் பெண் ஒருவருக்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் நேற்று திருமணம் நடைபெறவிருந்தது.

இந்நிலையில் திருமணத்துக்கு முந்தைய நாளான நேற்று முன் தினம் சுக்தேவின் மனைவியாக வர இருந்தவர், தனது காதலருடன் ஓடி போயுள்ளார்.

இதையறிந்த சுக்தேவ் அதிர்ச்சியில் உறைந்தார்.

மேலும் தனது திருமண கனவு சிதைந்துவிட்டதால் அதை தாங்கி கொள்ள முடியாமல் சுக்தேவ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் சுக்தேவ் சடலத்தை கைப்பற்றிவிட்டு அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தையும் கைப்பற்றினார்கள்.

அதில், என் வருங்கால மனைவியாக வரவேண்டியவர், அவர் காதலன், அவரின் சகோதரி ஹேமா, சகோதரர் ரோகித் ஆகியோர் தான் என் சாவுக்கு காரணம் என எழுதியிருந்தது.

இதையடுத்து சம்பவம் தொடர்பாக பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்