சாலையில் சுருண்டு விழுந்து பெண் மரணம்... இணையத்தில் விஷம் வாங்கியது அம்பலம்: பொலிசில் சிக்கிய கணவன்

Report Print Arbin Arbin in இந்தியா

தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் பெண் ஒருவர் சாலையில் சுருண்டு விழுந்து மரணமடைந்த சம்பவத்தில் கணவன் மற்றும் உறவினர்களை பொலிசார் கைது செய்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் வேர்க்கிளம்பி பகுதியை சேர்ந்த 29 வயதான திவ்யா சில்வெஸ்டர் என்பவரே சாலையில் சுருண்டு விழுந்து மரணமடைந்தவர்.

திவ்யா, கருங்கல் பகுதியில் உள்ள தனியார் கலைக்கல்லூரியில் பேராசிரியையாக இருந்தார். இஅவருக்கு கடந்த 2017 ஆம் ஆண்டு பெல்லார்மின் என்பவருடன் திருமணம் நடந்தது.

திருமணமான சில மாதங்களிலேயே தம்பதியிடையே அவ்வப்போது கருத்து வேறுபாடு ஏற்பட்டு கைகலப்பும் ஏற்பட்டு வந்தது.

இந்நிலையில், திவ்யா தனது இருசக்கர வாகனத்தில் கல்லூரிக்கு கிளம்பி உள்ளார்.

சுமார் ஒரு கி.மீற்றர் கடந்து சென்ற நிலையில் திடீரென வாகனத்தை சாலையோரம் நிறுத்திவிட்டு அங்கேயே தலையை பிடித்தபடி உட்கார்ந்துள்ளார்.

அவ்வழியாக சென்ற பெண்கள் விசாரித்தபோது, சாப்பிட்ட உணவு ஒத்துக்கொள்ளவில்லை என தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து உடனடியாக அவரை சாமியார்மடம் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு சென்ற சிறிது நேரத்தில் திவ்யா மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியானது.

தகவல் அறிந்து உறவினர்கள் மற்றும் பொலிசார் விரைந்து சென்று திவ்யாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் திவ்யாவின் தந்தை அளித்த புகாரின்பேரில், திவ்யாவின் கணவர் பெல்லார்மின், அவரது தந்தை பெர்க்மான்ஸ், தாய் அமலோற்பவம் ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

தொடர்ந்து, பெல்லார்மினிடம் மேற்கொண்ட விசாரணையில், நகை பாலீஷ் செய்வதற்கு பயன்படுத்தப்படும் விஷத்தன்மை கொண்ட ரசாயன பவுடரை கடந்த சில தினங்களுக்கு முன்னர் பெல்லார்மின் இணையம் வழி வாங்கியுள்ளது தெரியவந்தது.

நேற்று காலை உப்புமாவில் அந்த பவுடரை கலந்து திவ்யாவுக்கு அளித்துள்ளார். விஷம் கலந்திருப்பதை அறியாத திவ்யா அதை சாப்பிட்டு விட்டு கல்லூரிக்கு புறப்பட்டுள்ளார்.

மீதி இருந்த உப்புமாவை வீட்டில் உள்ள ஒரு நாய்க்கு போட்டுள்ளார். அதை சாப்பிட்ட நாயும் சுருண்டு விழுந்து இறந்துள்ளது.

இதனால் திவ்யாவை திட்டுமிட்டுதான் கொலை செய்துள்ளது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்