காதல் விவகாரத்தை தட்டி கேட்க சென்றதால் நடந்த விபரீதம்! விரட்டி கொலை செய்ய முயற்சித்த பயங்கரம்

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் காதல் விவகாரம் தொடர்பாக ரவுடியை வெட்டி கொலை செய்ய முயன்ற நான்கு பேரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

திருச்சி சங்கிலியாண்டபுரம் ராமமூர்த்தி நகரை சேர்ந்தவர் ஜேசுதாஸ்(40). ரவுடியாக இருக்கும் இவருக்கு வெங்கடேசன் என்ற மைத்துனர் உள்ளார்.

வெங்கடேசன் அப்பகுதியை சேர்ந்த திருமணம் ஆகி கணவர் மற்றும் மூன்று குழந்தைகளுடன் இருக்கும் பெண்ணிடம் கள்ளத்தொடர்பு வைத்துள்ளார்.

இந்நிலையில் அப்பெண்ணின் மூத்த மகளை, பாலக்கரை கீழப்புதூரை சேர்ந்த சவுந்தர்ராஜன் மகன் விஜய்பாபு(22) காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இதை அறிந்த வெங்கடேசன், விஜய்பாபுவை சந்தித்து தட்டிக்கேட்டதுடன், அவரை தாக்கியும் உள்ளார்.

இது விஜய்பாபுவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியதால் தனது நண்பர்களான விமல்(21), குமார்(25) மற்றும் கீழப்புதூர் அன்பழகன்(19) ஆகியோருடன் சென்று வெங்கடேசனை வெட்டி கொல்ல திட்டம் தீட்டியுள்ளனர்.

அதன் படி அங்கிருக்கும் ராமமூர்த்தி நகரில் உள்ள சங்கிலியாண்டவர் கோவில் அருகில் ரவுடியான ஜேசுதாசுடன், வெங்கடேசன் பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது இவர்கள் வருவதைக் கண்ட வெங்கடேசன் அங்கிருந்து தப்பி ஓட்டம் பிடித்தார். அவரை விஜய்பாபு தனது நண்பர்களுடன் சேர்ந்து விரட்டிச்சென்றார்.

அவர்களை ரவுடியான ஜேசுதாஸ் தடுத்து நிறுத்தி திட்டினார். இதனால், ஆத்திரம் அடைந்த 4 பேரும் சேர்ந்து அரிவாளால் ஜேசுதாசை தலை மற்றும் இதர பகுதியில் வெட்டிக் கொல்ல முயன்றனர். ரத்த வெள்ளத்தில் ஜேசுதாஸ் மயங்கி கீழே விழுந்ததும் அனைவரும் அங்கிருந்து தப்பி ஓட்டம் பிடித்தனர்.

இதுகுறித்து காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில், நேற்று விஜய்பாபு மற்றும் அவரது நண்பர்களான விமல், அன்பழகன், குமார் ஆகியோர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, பின்னர் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers