வயிற்று வலியால் பல மாதங்கள் துடித்த மகன்..ஆனால் இறுதியில்? வேதனையுடன் கூறிய பிரபல இயக்குனர்

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் வயிற்று வலி காரணமாக கடந்த நான்கு மாதங்களாக அவதிப்பட்டு வந்த சிறுவனின் வயிற்றில் கேரி பேக் துண்டுகள் இருந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, சின்மயா நகரைச் சேர்ந்தவர் கஸாலி. திரைப்பட இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரான இவருக்கு ஹரிஷ் அகமது என்று 12 வயது மகன் உள்ளார்.

அகமது சென்னையில் இருக்கும் தனியார் பள்ளி ஒன்றில் 7-ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில் அகமதுவிற்கு திடீரென்று வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. கடந்த நான்கு மாதங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த அகமதுவை பெற்றோர் மருத்துவமனைக்குச் சென்று நிறைய சோதனைகள் செய்து மாத்திரை, மருந்துகள் என பல முயற்சிகள் மேற்கொண்டுள்ளனர்.

ஆனால் வயிற்று வலி தீராத நிலையில், ஒரு நாள் அதிகமாக தண்ணீர் குடித்ததால் வாந்தி வருகிறது என்று அகமது வாந்தி எடுத்த போது, அவரது வயிற்றில் இருந்து கேரி பேக் துண்டுகள் வந்துள்ளது.

இது குறித்து அவர் பெற்றோரிடம் சொன்ன போது முதலில் நம்பவில்லை, அதன் பின் அவர்கள் கண்முன்னே மறுபடியும் வாந்தி எடுத்த போது இன்னொரு கேரி பேக் வந்துள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பார்த்த போது, பெரிய பாதிப்பு எதுவும் இல்லை என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இது குறித்து கஸாலி கூறுகையில், கடந்த நான்கு மாதங்களாக அவன் பட்ட துயரத்தை கூற முடியாது. எந்த மருத்துவர்களிடம் அழைத்துச் சென்றாலும் பயன் எதுவும் இல்லை.

இரவு முழுவதும் தூங்கமாட்டான். என்னென்ன டெஸ்ட் எடுக்க வேண்டுமோ அனைத்து டெஸ்ட் எடுத்தும் ஒன்றும் தெரியவில்லை.

இருப்பினும் அல்சருக்கான மாத்திரை, மருந்துகளையே மருத்துவர்கள் கொடுத்தனர். காலையில் நன்றாக பள்ளிக்கு செல்வான் திடீரென்று வயிற்று வலி காரணமாக வீட்டிற்கு வந்துவிடுவான்.

பல இரவுகள் எங்களுக்கு மருத்துவமனையிலே கழிந்தன. இப்போது லேசமான எரிச்சல் மட்டும் அவனுக்கு இருக்கிறது. மற்ற படி ஒன்றுமில்லை.

ஏதாவது ஓர் உணவுப் பொருளோடுதான், கேரி பேக் துண்டுகள் வயிற்றுக்குள் சென்றிருக்க வேண்டும். வீட்டுச் சாப்பாட்டில் அப்படி நடந்திருக்க வாய்ப்பில்லை.

அவன் படிக்கும் பள்ளியில் கேன்டீனில் சாப்பிட்ட உணவுகளோடுதான் இது சென்றிருக்க வேண்டும். சம்சா விரும்பிச் சாப்பிடுவான். அதற்குள் வைக்கப்படும் மசாலாப் பொருள்களோடு இது சென்றிருக்க வாய்ப்பிருக்கிறது. பள்ளியில் புகார் செய்திருக்கிறேன். நடவடிக்கை எடுப்பதாகச் சொல்லியிருக்கிறார்கள் என்று கூறி முடித்தார்.

மேலும் எக்ஸ்ரே, அல்ட்ராசோனிக் போன்ற எந்தப் பரிசோதனையாலும் கிளாஸ், பிளாஸ்டிக் போன்ற பொருள்களைக் கண்டறியமுடியாது என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.


மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்