இலங்கையை சேர்ந்த இருவர் தமிழகத்தில் கைது: புகைப்படத்துடன் வெளியான பின்னணி தகவல்

Report Print Raju Raju in இந்தியா

இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக தமிழகம் வந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் வழியாக இலங்கைக்கு சட்ட விரோதமான செயல்பாடுகள் அடிக்கடி நடைபெற்று வருகிறது.

இதனை கண்காணிக்கும் பணியில் க்யூ பிரிவு மற்றும் கடலோர பாதுகாப்பு குழும காவல் துறையினர் ஈடுபட்டனர்.

அப்போது சேராங்கோட்டை கடற்கரை பகுதியில் சட்ட விரோதமாக வந்த பிளாஸ்டிக் படகை காவல் துறையினர் மடக்கி பிடித்தனர்.

அந்த படகில் வந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இருவரும் இலங்கை மன்னார் மாவட்டத்தை சேர்ந்த சியோன் பாரூக் மற்றும் சுனந்தபாலயோகராஜ் என்பது தெரிய வந்தது. இதனையடுத்து படகு மற்றும் இரண்டு செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

பின்னர் காவல் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்ட சியோன் மற்றும் சுனந்தபாலயோகராஜிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்