அவன், இவன் என ஒருமையில் பேசி வாக்குவாதம் செய்த விஜயகாந்த் மனைவி பிரேமலதாவால் பரபரப்பு

Report Print Raju Raju in இந்தியா

செய்தியாளர்கள் சந்திப்பில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், ஒருமையில் பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.

திமுக பொருளாளர் துரைமுருகனை தேமுதிக நிர்வாகிகள் சந்தித்து கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியதாக செய்திகள் வெளியானது.

இது தொடர்பாக பேச செய்தியாளர்களை இன்று சந்தித்தார் பிரேமலதா.

ஆரம்பம் முதலே மிகவும் எடுத்தெறிந்து பேசி வந்த பிரேமலதா தடித்த குரலில் மிகவும் ஆவேசமாக பேசிக்கொண்டே இருந்தார்.

அது மட்டுமின்றி நிருபர்கள் ஒவ்வொருவரையும் நீ வா போ என்று பேசினார்.

நிருபர்களின், பெயர்களை குறிப்பிட்டு அவன், இவன் என்று பேசிய போது முதலில் யாரும் பெரிதாக நினைத்துக் கொள்ளவில்லை.

ஆனால் தொடர்ந்து இப்படியே பேசியதால், மொத்தமாக எழுந்து நின்று, முதலில் ஒருமையில் பேசுவதை நிறுத்திவிட்டு செய்தியாளர் சந்திப்பை தொடருங்கள் என்று நிருபர்கள் கோஷமிட்டனர்.

இதற்கு பதிலளித்த பிரேமலதா, நீங்கள் எதை வேண்டுமானாலும் கேட்பீர்கள், நான் பொறுமையாக பதில் சொல்ல வேண்டுமா என்றார்.

அதற்கு நிருபர்கள், நாங்கள் உங்கள் கட்சியின் கொள்கை குறித்தும், செயல்பாடு குறித்தும் தான் கேள்வி எழுப்புகிறோம். , நீங்க ஒருமையில் பேசுவது சரியில்லை என்று கண்டனத்தை பதிவு செய்தனர்.

இதையடுத்து அவர்கள் கேள்விக்கு பதிலளித்த பிரேமலதா கூட்டணி குறித்து ஓரிரு நாளில் அறிவிக்கப்படும் என கூறினார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்