மரத்தில் அமர்ந்து குறி சொன்ன பூசாரி.. தவறி விழுந்த அதிர்ச்சி வீடியோ! மகாசிவராத்திரியில் நேர்ந்த பரிதாபம்

Report Print Kabilan in இந்தியா

தமிழகத்தில் பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறும்போது மரத்தில் இருந்து தவறி விழுந்து பூசாரி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் பேரூரை அடுத்த சுண்டக்காமுத்தூர் பகுதியில் ஐயா சாமி திருக்கோயில் உள்ளது. இந்த கோயிலில் அமாவாசை, பௌர்ணமி நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

அதே போல் ஒவ்வொரு ஆண்டும் மகாசிவராத்திரி அன்று அய்யாசாமி என்பவர், கோயில் மைதானத்தில் அமைக்கப்பட்ட 20 அடி பூஜை மரத்தின் மீது அமர்ந்து பக்தர்களுக்கு குறி சொல்வது வழக்கம்.

இந்த ஆண்டும் மகாசிவராத்திரி பூஜை நடந்தது. பூஜை செய்யப்பட்ட மரத்தின் மீது ஏறிபடுத்துக் கொண்ட அய்யாசாமி, ஆக்ரோஷமாக பக்தர்களுக்கு குறி சொல்லிக் கொண்டிருந்தார்.

அப்போது திடீரென நிலை தடுமாறி 20 அடி கம்பத்தில் இருந்து தவறி விழுந்தார். இதில் படுகாயமடைந்த அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். குறி சொல்லிக் கொண்டிருந்த பூசாரி தவறி விழுந்து மரணமடைந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்