சிறுவனுக்கு பணம் கொடுத்து குண்டை வீச செய்த தீவிரவாத இயக்கம்: வெளிவரும் பின்னணி

Report Print Arbin Arbin in இந்தியா

காஷ்மீரில் பேருந்து நிளையத்தில் தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரத்தில் சிறுவனுக்கு பணம் கொடுத்து நடத்தப்பட்டது அம்பலமாகியுள்ளது.

காஷ்மீரின் ஜம்மு பேருந்து நிலையத்தில் நேற்று கையெறி குண்டு வீசப்பட்டதில் இருவர் உயிரிழந்தனர்.

.32 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவத்துக்கு பயங்கரவாதிகளின் சதிச்செயல் காரணமா என்ற கோணத்தில் விசாரணை தொடங்கியது.

பொலிசாரின் விசாரணையில் 16 வயது சிறுவன் கைது செய்யப்பட்டான். விசாரணையில் ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத இயக்கம் ரூ.50 ஆயிரம் பணம் கொடுத்து சிறுவனை பயன்படுத்தியது தெரியவந்துள்ளது.

காஷ்மீரில் 2000-ம் ஆண்டில் நிலவிய நிலையை மீண்டும் தீவிரவாதிகள் கையில் எடுத்துள்ளனர்.

பயங்கரவாத குழுக்கள் சிறுவர்களை குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு பயன்படுத்துவதன் மூலம் சட்டத்தின் கடும் தண்டனையிலிருந்து அவர்கள் தப்பித்துக்கொள்கிறார்கள் என கூறும் பொலிசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

குறித்த பேருந்து நிலையத்தில் குண்டுவீசப்படுவது இது 3 வது முறையாகும். முன்னதாக கடந்த ஆண்டு மே மாதம் குண்டுவீசப்பட்டதில் 2 பொலிசார் உள்பட 3 பேர் காயமடைந்தனர். பின்னர் டிசம்பர் 28–ஆம் திகதி இரவும் பயங்கரவாதிகள் கையெறி குண்டு ஒன்றை வீசிச்சென்றனர்.

புல்வாமா மாவட்டத்தில் கடந்த மாதம் துணை ராணுவத்தினர் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய நிலையில், மீண்டும் ஒரு மிகப்பெரிய தாக்குதல் சம்பவம் காஷ்மீரில் அரங்கேறி இருப்பது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers