மகளிர் தினத்தில் கர்ப்பிணி தாய்க்கு நடந்த அதிசயம்! உற்சாகத்தில் உறவினர்கள்

Report Print Vijay Amburore in இந்தியா

சர்வதேச மகளிர் தினத்தில் கோவையை சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவருக்கு 3 பெண் குழந்தைகள் பிறந்துள்ளதை உறவினர்கள் அனைவரும் கேக் வெட்டி மகிழ்ச்சியாக கொண்டாடி வருகின்றனர்.

கோவையை சேந்த கூலித்தொழிலாளியான சுரேஷின் நிறைமாத கர்ப்பிணி மனைவி சிந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

அப்போது அவருக்கு 3 குழந்தைகள் இருப்பது தெரியவந்தது. பிரசசிவத்திற்காக 2-ம் திகதி முதல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிந்துவிற்கு அதற்கான இரும்புச் சத்து மருந்துகள் கொடுத்து கண்காணிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் இன்று காலை 9.23 மணிக்கு சிந்துவிற்கு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்தனர். அப்பொழுது அழகியபெண் குழந்தை பிறந்தது. அதனை தொடர்ந்து 9.24, 9.25 மணிக்கு அடுத்தடுத்து இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தன.

ஒன்றே முக்கால் கிலோ எடையில் 2 குழந்தைகள், ஒன்றரை கிலோ எடையில் ஒரு குழந்தையும் பிறந்தது. அறுவை சிகிச்சை மூலம் பிறந்த 3 குழந்தைகளும் ஆரோக்கியமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

சர்வதேச மகளிர் தினத்தில் மூன்று பெண் குழந்தைகள் ஒரே பிரசவத்தில் ஆரோக்கியத்துடன் பிறந்திருப்பதை கொண்டாடும் விதமாக மருத்துவமனையில் உறவினர்கள் அனைவரும் கேக் வெட்டி கொண்டாடினர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்