ஒரே ஆண்டில் வருமானத்தில் உச்சம் தொட்ட திமுக: எத்தனை கோடி தெரியுமா?

Report Print Arbin Arbin in இந்தியா

ஒரே நிதியாண்டில் திமுகவின் வருமானம் 800 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் அரசியல் கட்சிகள் தங்கள் வருமான விவரங்களை தேர்தல் ஆணையம் மற்றும் வருமான வரித்துறையிடம் சமர்ப்பித்து வருகின்றன.

அந்த விவரங்களின் அடிப்படையில் ஜனநாயக சீர்திருத்த சங்கம் எனும் என்ஜிஓ, மாநில அரசியல் கட்சிகளின் வருமான விவரங்களை வெளியிட்டுள்ளது.

இதன்படி, கடந்த 2017-18-ஆம் நிதியாண்டில் திமுக ரூ.35.74 கோடி வருமானத்தை பெற்றிருப்பது தெரியவந்துள்ளது.

கடந்த 2016-17-ஆம் நிதியாண்டில் திமுகவின் வருமானம் வெறும் 3.78 கோடியாக இருந்த நிலையில் அதுவே 2017-18-ஆம் நிதியாண்டில் 35.74 கோடியாக உயர்ந்துள்ளது. இது 845.71 சதவீத உயர்வு ஆகும்.

பிராந்திய கட்சிகளின் வருமான பட்டியல்களில் சமாஜ்வாதி கட்சி முதலிடத்தில் உள்ளது.

2017-18 ஆம் நிதியாண்டில் அக்கட்சியின் வருமானம் ரூ.47.19 கோடியாக இருந்தது. இதற்கு அடுத்தப்படியாக திமுகதான் உள்ளது.

அதேசமயம் தமிழகத்தில் ஆளும் கட்சியான அதிமுக 2017-18-ஆம் நிதியாண்டில் ரூ.12.72 கோடி வருமானம் பெற்றது தெரியவந்துள்ளது.

2016-17-ல் அதிமுக பெற்ற வருமானம் ரூபாய் 48.78 கோடியாக இருந்த நிலையில் கடந்த நிதியாண்டில் அதிமுகவின் வருமானம் 74 சதவீதம் சரிவு கண்டுள்ளது.

கடந்த 2017-18 ஆம் நிதியாண்டில் 37 மாநில கட்சிகளின் மொத்த வருமானம் ரூ.237.27 கோடியாகும்.

இவற்றில் முதல் மூன்று இடங்களில் உள்ள கட்சிகளின் (சமாஜ்வாதி, திமுக, டிஆர்எஸ்) மொத்த வருமானம் 110.21 கோடி ஆகும்.

அதேசமயம் 2017-18-ஆம் நிதியாண்டில் திமுக செலவு செய்துள்ள தொகை ரூ.27.47 கோடி ஆகும்.

இதிலும் சமாஜ்வாதி கட்சி தான் முதலிடத்தில் உள்ளது. சமாஜ்வாதி கட்சி 207-18-ஆம் நிதியாண்டில் மொத்தமாக செலவு செய்துள்ள தொகை ரூ.34.53 கோடி என தெரியவந்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers