கணவர் இறந்த சில மாதங்களுக்குள் அரசியல் ஆசையா? கேள்வியால் அதிர்ந்த பிரபல நடிகை

Report Print Arbin Arbin in இந்தியா

இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் அரசியல் களம் காணவிருக்கும் நடிகை சுமலதாவை, கணவர் இறந்த சில மாதங்களுக்குள் பதவிக்கு ஆசைப்படுவதா என அரசியல் பிரபலம் ஒருவர் விமர்சித்து பேசியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னட நடிகரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அம்பரீஷ் அண்மையில் காலமானார்.

அம்பரீஷின் சொந்த‌ தொகுதியான மண்டியாவில் அவரது மனைவியும், நடிகையுமான சுமலதா, மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார்.

ஆனால், இதற்கு கர்நாடக முதல்வர் குமாரசாமி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மட்டுமின்றி அந்தத் தொகுதியில் தமது மகன் நிகில் கவுடாவை களமிறக்கவும் குமாரசாமி திட்டமிட்டுள்ளார்.

இருப்பினும், மண்டியாவில் போட்டியிட காங்கிரஸ் மேலிடம் தமக்குவாய்ப்பு வழங்கும் என்றும்,

இல்லையெனில், அங்கு சுயேச்சையாக போட்டியிடுவேன் எனவும் சுமலதா தெரிவித்திருக்கிறார்.

சுமலதா சுயேச்சையாக களமிறங்கினால் ஆதரவு அளிப்பதாக பாஜக தலைவர்கள் சிலர் அறிவித்துள்ளனர்.

இந்தநிலையில் குமாரசாமியின் சகோதரரும், மாநில அமைச்சருமான ரேவண்ணா, சுமலதாவை கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார்.

சுமலதாவின் கணவர் அம்ப்ரீஷ் இறந்து சில மாதங்களே ஆகிறது. அவருக்கு அதற்குள் அரசியல் ஆசையை பாருங்கள்.

எம்.பி.யாக வேண்டும் என விரும்புகிறார். சினிமாவில் நடிப்பது போலவே அரசியலிலும் நடிக்கிறார் என ரேவண்ணா கூறியுள்ளார்.

இந்த விவகாரம் தற்போது கர்நாடகா அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுமலதா குறித்து ரேவண்ணா பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என பலரும் வலியுறுத்தி வந்தனர்.

ஆனால், தாம் உண்மையை மட்டுமே பேசியுள்ளதாகவும் அதனால் மன்னிப்பு கேட்க முடியாது எனவும் திட்டவட்டமாக கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers