தனி அறையில் அடைத்து வைத்த தந்தை...... அம்மிக்கல்லை தலையில் போட்டு கொன்ற மகன்

Report Print Deepthi Deepthi in இந்தியா

திண்டுக்கல் மாவட்டத்தில் குடிபோதையில் இருந்த மகன் தன்னை தனி அறையில் பெற்றோர் அடைத்து வைத்த காரணத்தால் அம்மிக்கலை போட்டு தந்தையை கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செல்வரஜ் - மகாலட்சுமி தம்பதியினரின் மகன் வினோத்குமார் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

வினோத்குமார் குடிப்பழக்கத்துக்கு அடிமையானவர். இவர் தனது தெருவில் உள்ளவர்களிடம் நேற்று சண்டையிட்டுள்ளார்.

இதனைக் கண்ட அவருடைய பெற்றோர், வினோத்குமாரை வீட்டுக்கு அழைத்து வந்து தனி அறையில் வைத்து பூட்டினர். தன்னை வெளியே விடும்படி அவர் கூச்சலிட்டார்.

பின்னர் கதவை உடைத்துக்கொண்டு வெளியே வந்த வினோத், அம்மிக்கலை எடுத்து தனது தந்தையின் தலையில் போட்டு கொலை செய்துள்ளார். ரத்த வெள்ளத்தில் தந்தை உயிரிழந்தார். கத்தரிக்கோலால் தாயையும் தாக்கியுள்ளார்.

வீட்டில் படுகாயத்துடன் உயிருக்கு போராடி கொண்டிருந்த மகாலட்சுமியை பொலிசார் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் வினோத்குமாரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்