மைத்துனி மீது ஆசை! நைசாக நிர்வாண புகைப்படங்களை எடுத்து இளைஞர்.. அடுத்து நடந்த சம்பவம்

Report Print Raju Raju in இந்தியா

இந்தியாவில் மைத்துனியின் நிர்வாண புகைப்படங்களை காட்டி அவரை மிரட்டி வந்த நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் லிடு மாலி. இவர் தனது மனைவியின் தங்கையான 25 வயது பெண்ணின் நிர்வாண புகைப்படங்களை ரகசியமாக கமெராவில் பதிவு செய்துள்ளார்.

பின்னர் அதை அவரிடம் காட்டி தனது விருப்பத்துக்கு இணங்கும்படி வற்புறுத்தியுள்ளார்.

மேலும், அப்படி தான் சொல்வதை செய்யவில்லை என்றால் அந்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவேன் என மிரட்டி வந்தார் மாலி.

இதனால் அதிர்ச்சியடைந்த அப்பெண் இது குறித்து பொலிசில் புகார் அளித்தார்.

புகாரையடுத்து பொலிசார் மாலியை கைது செய்துள்ளனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தன் மீதான குற்றத்தை அவர் ஒப்பு கொண்டுள்ளார்.

மாலியிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்