7 தமிழர்கள் விடுதலை விவகாரம்... சட்டத்தில் நாம் குறுக்கிட முடியாது.. நடிகர் கமல்ஹாசன் அதிரடி

Report Print Raju Raju in இந்தியா

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான 7 பேர் விடுதலை தொடர்பான கேள்விக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் பதிலளித்துள்ளார்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் இன்று நிரூபர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறுகையில், தேர்தலில் எங்கள் கட்சிக்கு ரஜினிகாந்த் ஆதரவு தருவாரா என கேட்கிறீர்கள்.

ஆதரவு கேட்பதை விட கொடுப்பதுதான் பெரியது. கேட்பது என்பது ஒருவிதமான சங்கோஜத்தை ஏற்படுத்தும். கேட்காமல் கொடுப்பது பெரிய வி‌டயம். கேட்காமல் பெறுவதும் பெரிய வி‌டயம் என கூறியுள்ளார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான 7 பேர் விடுதலை குறித்து கமல்ஹாசன் கூறுகையில், சட்டத்தில் நாம் குறுக்கிட இயலாது. ஆனால் கருணை என்பது வேறு. அதற்கான வாய்ப்பு இருக்கிறது. கருணையை காட்ட வேண்டியவர்கள் காட்ட வேண்டும். சட்டம் தன் இயக்கப்படி இயங்க வேண்டும். கருணை என்பது நம் எல்லோருக்கும் உள்ளது.

நாம் இப்போது 7 பேரை பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம். அதேநேரத்தில் 7½ கோடி பேரின் விடுதலை பற்றியும் பேச வேண்டும் என்பதுதான் எங்கள் ஆசை என கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers