90 கோடி மக்கள் வாக்களிக்கும் உலகிலேயே மிகப்பெரிய தேர்தல்!

Report Print Kabilan in இந்தியா

இந்தியாவில் நடக்க உள்ள நாடாளுமன்ற தேர்தல் உலகிலேயே மிகப்பெரிய தேர்தல் என்ற பெருமையைப் பெறுகிறது.

இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 11ஆம் திகதி தொடங்கி, மே 19ஆம் திகதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. சுமார் 90 கோடி வாக்காளர்கள் இந்த தேர்தலில் வாக்களிக்க உள்ளதால், உலகிலேயே மிகப்பெரிய தேர்தல் என்ற பெருமையை இந்த தேர்தல் பெறுகிறது.

கடந்த 2017ஆம் ஆண்டு புள்ளிவிவரப்படி இந்தியாவில் 133.97 கோடி பேர் வசிக்கின்றனர். இவர்களில் 90 கோடி மக்கள் வாக்களிக்கும் உரிமையைப் பெற்றுள்ளனர். எனவே, எண்ணிக்கையின் அடிப்படையில் இந்தத் தேர்தல் தான் உலகிலேயே மிகப்பெரிய தேர்தல் என்று கூறப்படுகிறது.

இதற்கு முன்பு, கடந்த 2014ஆம் ஆண்டு தேர்தலில் 85 கோடியே 50 லட்சம் பேர் வாக்களித்தனர். தற்போது 5 கோடியே 50 லட்சம் பேர் அதிகரித்துள்ளனர். இந்தியாவில் நடத்தப்படும் 17வது நாடாளுமன்ற தேர்தல் இதுவாகும்.

இந்தியாவில் நாடு முழுவதும் உள்ள கட்சிகளில் 1841 கட்சிகள் தேர்தல் ஆணையத்தினால் முறையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இந்தத் தேர்தலில் 543 தொகுதிகளுக்குக்கு தேர்தல் நடத்த, சுமார் 10 லட்சம் வாக்குச்சாவடிகளில் 11 லட்சம் மின்னணு வாக்கு இயந்திரங்கள் அமைக்கப்பட உள்ளன.

முதல் முறையாக இந்தியாவில் தேர்தல் நடத்தப்பட்டபோது 17 கோடி பேர் மட்டுமே வாக்களித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers