தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள பாலியல் பலாத்கார விவகாரம்! வீடியோவை கூகுளில் அதிகம் பேர் தேடியதாக அதிர்ச்சி தகவல்

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள பொள்ளாச்சி சம்பவம் தொடர்பான வீடியோவை கூகுளில் அதிகம் பேர் தேடியுள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியைச் சேர்ந்த திருநாவுக்கரசு என்பவர், அதே பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருடன் பேஸ்புக்கில் அறிமுகமாகி நெருங்கிப் பழகியுள்ளார்.

அதன் பின்னர், தனது நண்பர்களுக்கு அறிமுகம் செய்து வைப்பதாக கூறி அவர், குறித்த பெண்ணை காரில் ஏற்றிச் சென்று வழியில் ஊஞ்சபேலம்பட்டி என்ற இடத்தில் திருநாவுக்கரசின் நண்பர்கள் காரில் ஏறியுள்ளனர்.

அவர்கள் அப்பெண்ணை செல்போனில் ஆபாசமாக படம்பிடித்து, அதனை வைத்து மிரட்டி அவரது நகைகளை வாங்கியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து அந்த பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் சதீஷ், சபரிராஜன், வசந்தகுமார் ஆகியோரை கைது செய்தனர்.

இருப்பினும் இதில் முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசு பொலிசாரிடம் சிக்காமல் தலைமறைவாக இருந்த நிலையில், அவரையும் பொலிசார் கைது செய்தனர்.

இந்நிலையில், தன்னை நம்பி வந்த பெண்ணை தனது நண்பர்களுடன் சேர்ந்து திருநாவுக்கரசு பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

மேலும், அதனை வீடியோ எடுப்பது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது அதில் அப்பெண் கதறி அழுவது நெஞ்சை பதற வைக்கும் வகையில் இருந்தது.

இந்த சம்பவத்தின் பின்னணி அரசியல் வாரிசுகள் இருப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால் பொலிசார் அப்படி எதுவும் இல்லை என்று கூறியுள்ளனர்.

தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் தற்போது கூகுளில் தீயாக பரவி வருகிறது. இந்த வீடியோவை கூகுளில் அதிகம் பேர் தேடப்பட்டு தற்போது கூகுளில் இரண்டாம் இடத்திலும் உள்ளது என்பது குறிப்பிடத்தது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers