பெண்கள் மீது ஆசை..... தூதாக போகும் தங்கைகள்: 200 பெண்கள் பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் கும்பல் குறித்து அம்பலமான தகவல்கள்

Report Print Deepthi Deepthi in இந்தியா

பொள்ளாச்சியில் 200 பெண்கள் பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் சம்பந்தப்பட்ட கும்பல் குறித்து சில அதிர்ச்சி பின்னணி தகவல்கள் வெளியாகியுள்ளன.

200 பெண்கள், 50 வீடியோக்கள், ஆளுங்கட்சிப் பிரமுகர்கள் தொடர்பு என்று இந்த சம்பவம் தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

முக்கிய குற்றவாளியாக கூறப்படும் திருநாவுக்கரசு ஃபைனான்சியர். ஆரம்பத்தில் பெண்களுடன் உல்லாசமாக இருந்தால் போதும் என்று நினைத்தவர்கள் அதன் பின்னர் தான் தங்கள் வழியை மாற்றியுள்ளார்கள்.

பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் தங்களது தங்கைகள் மூலமாக மாணவிகளுடன் அறிமுகம் ஆவார்கள். ஒரு சிலரின் தங்கைகள், சக மாணவிகளின் கைப்பேசி நம்பர் வரை தந்துவிடுவார்கள்.

மிகவும் ஆடம்பரமாக ஆடை அணிந்து உலா வருவார்கள். இவர்கள் சில பெண்கள் வலைவிரித்தாலும், ஒரு சில பெண்கள் தானாகவே இவர்கள் வலையில் வந்து விழுந்திருக்கிறார்கள்.

சென்னையில் இருந்து பெண்மணி ஒருவர், ஒரு நாள் ஜாலியாக இருப்பதற்கு வந்து, பிறகு ஒரு வாரம் இவர்களுடன் தங்கியுள்ளார். ஆனால், இந்தக் கும்பல் ஏமாற்றிய நகை, பணம் குறித்த தகவல்கள் விவரம் வெளிவரவில்லை.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சதீஸ், சபரிராஜன், வசந்தகுமார் ஆகிய மூன்று பேருக்கு, 15 நாள்களுக்கு நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், பொள்ளாச்சியில் பாலியல் புகாரில் கைதான ஏ.நாகராஜ் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

பாலியல் வழக்கில் தொடர்புடைய நாகராஜை கட்சியில் இருந்து நீக்குவதாக ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி அறிவித்துள்ளனர்.

இதற்கிடையில், திருநாவுக்கரசின் பேஸ்புக் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன, குறிப்பாக அவர் தனது பெற்றோருடன் இருக்கும் புகைப்படத்தை வைரலாகிக்கிய நெட்டிசன்கள் மோசமான வார்த்தைகளால் வசைபாடியுள்ளனர்.

திருநாவுக்கரசுக்கு உதவிய பெண்தோழி

திருநாவுக்கரசு தனது கல்லூரி காலத்தில் இருந்தே இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார்.

இந்த வழக்கின் மிக முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசு தலைமறைவாக இருந்த பொழுது அவரின் பெண் தோழி ஒருவர் உதவி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், அந்தப் பெண்ணைப் பற்றிய தகவல்களை வெளியிட இயலாது என்று பொலிசார் தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்ட பெண் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகின்றது .இதனால் பாதிக்கப்பட்ட பெண் மன உளைச்சலுக்கு உள்ளாகும் வாய்ப்பு இருப்பதனால் இது தடுக்கப்பட வேண்டும்.

இந்த வீடியோக்களை பரப்புபவர் மீது சட்டப்படி கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்,

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்