பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரம்! இந்த பிரபலத்தின் மகன்களுக்கு தொடர்பா? பரபரப்பு தகவல்

Report Print Raju Raju in இந்தியா

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் அதிமுகவின் எம்.எல்.ஏ-வும், துணை சபாநாயகருமான பொள்ளாச்சி ஜெயராமனின் இரண்டு மகன்களுக்கு தொடர்பு இருப்பதாக செய்தி வெளியான நிலையில் அதை ஜெயராமன் மறுத்துள்ளார்.

கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சியில் கும்பல் ஒன்று 100க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகளை ஃபேஸ்புக் மூலம் ஏமாற்றி, மிரட்டி பாலியல் துன்புறுத்தல் செய்ததாக எழுந்துள்ள புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரத்தில் கைதான சபரிராஜன் என்கிற ரிஷ்வந்த், சதீஷ், வசந்தகுமார் மற்றும் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் திருநாவுக்கரசு ஆகியோர் கோவை மத்திய சிறையில் குண்டர் சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்த பாலியல் குற்றங்களுக்கு பின்னணியில் அதிமுகவின் எம்.எல்.ஏ-வும், துணை சபாநாயகருமான பொள்ளாச்சி ஜெயராமனின் இரண்டு மகன்களான பிரவீன் மற்றும் முகுந்தன் ஆகியோர் இருப்பதாக தனியார் பத்திரிக்கை ஒன்று செய்தி வெளியிட்டது.

அதே போல குற்றவாளிகளை அதிமுக காப்பாற்ற முயல்வதாக திமுக தலைவர் மு.க ஸ்டாலின் குற்றசாட்டியுள்ளார்.

இது தொடர்பாக விளக்கமளித்துள்ள பொள்ளாச்சி ஜெயராமன், தேர்தல் நேரத்தில், இதுபோன்று தனக்கு எதிராக அவதூறு பரப்பப்படுகிறது.

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் முதன் முதலில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியவன் நான் தான்.

நான் கூறிதான் பாதிக்கப்பட்ட பெண் புகார் தெரிவித்தார், வழக்கில் தொடர்புடையவர்களை காப்பாற்ற முயற்சிக்கவில்லை, இதில் எங்களுக்கு சம்மந்தமில்லை என கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers