விஸ்வரூபமெடுக்கும் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரம்! போராட்டத்தில் குதித்த மாணவர்கள்

Report Print Kabilan in இந்தியா

பொள்ளாச்சி கொடூரத்திற்கு காரணமானவர்களுக்கு கடும் தண்டனை வழங்கக் கோரி திருச்சி மற்றும் கோவை சட்டக் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், சமூக வலைதளங்களில் வெளியான வீடியோ காட்சிகள் அனைவரையும் பதற வைக்கும் வகையில் இருந்தது.

இதனை தொடர்ந்து நடிகர்கள், பிரபலங்கள் என பலரும் கண்டனக் குரல்களை பதிவு செய்தனர். இந்நிலையில், பொள்ளாச்சி கொடூர சம்பவத்திற்கு காரணமானவர்களை கைது செய்யவும், கடும் தண்டனை வழங்கக்கோரியும் திருச்சி மற்றும் கோவை சட்டக் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கிடையில், இந்த விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட இந்திய மாணவர் சங்கத்தினரை பொலிசார் கைது செய்தனர்.

இந்நிலையில், பொள்ளாச்சி விவகாரத்தில் குற்றவாளிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் காவல்துறை டிஜிபி ராஜேந்திரனை சந்தித்து மனு அளித்தார்

மாணவர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளதால் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்