பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை: சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவு

Report Print Abisha in இந்தியா

தமிழக மக்களை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு தற்போது சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.

தற்போது தமிழர்களால் பரவலாக பேசம்படும் விவாத பொருளாக இருப்பது பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு.

இதில் குற்றம் சாட்டப்பட்ட சபரிராஜன் (வயது 25), திருநாவுக்கரசு (25), சதீஷ் (28), வசந்தகுமார் (27) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

கோவை மாவட்டத்தை சேர்ந்தமாணவி ஒருவர் இந்த கும்பலிடம் சிக்கி பாதிக்கப்பட்ட காவல் நிலையம் சென்ற பின்னர்தான் இவ்விவகாரம் தொடர்பான அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி வருகிறது.

இந்த கொடூரக் கும்பல் 200-க்கும் அதிகமான பெண்களை காதல் என்ற வலையை வீசி கொடூரமான முறையில் நடத்தியதும், வீடியோ எடுத்ததும் அதை ரசித்ததும் தெரிய வந்தது.

இந்த நிலையில், பொள்ளாச்சி பாலியல் வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த வழக்கில் முறையாக விசாரணை நடைபெறவில்லை என குற்றச்சாட்டு எழுந்த நிலையில் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி ராஜேந்திரன் நடவடிக்கை எடுத்துள்ளார்.

முன்னதாக, இந்த வழக்கில் தொடர்புடைய 4 பேர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers