தற்கொலை செய்ய தூண்டுகிறது! பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட மாணவி பேசியதாக வெளியான ஆடியோ ?

Report Print Raju Raju in இந்தியா

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், இதில் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவி பேசிய ஆடியோ வெளியாகியுள்ளது.

இளம்பெண்ணொருவர் கடந்த மாதம் 24ஆம் திகதி பொலிசில் ஒரு புகார் அளித்தார். அதில், பொள்ளாச்சியை சேர்ந்த சபரிராஜன் என்பவரை பேஸ்புக் மூலம் காதலித்தேன்.

ஒருநாள் நண்பர்களோடு வெளியிடங்களுக்கு போகலாம் என அவர் கூறினார். அங்கு திருநாவுக்கரசு, சதீஷ், வசந்த்குமார் ஆகியோரும் வந்தனர்.

நால்வரும் என்னிடம் தவறாக நடக்க முயன்றதோடு ஆபாசமாக செல்போனில் படம் எடுத்தார்கள். என்னால் அவர்களின் பிடியிலிருந்து தப்பமுடியவில்லை.

வீடியோவை வைத்து என்னிடம் பணம் கேட்டு மிரட்டுகிறார்கள் என குறிப்பிட்டிருந்தார். புகாரின் அடிப்படையில் நான்கு பேரை பொலிசார் கைது செய்தனர்.

இந்நிலையில் புகாரளித்த அந்த மாணவி பேசியதாக ஒரு ஆடியோ வெளியாகியுள்ளது.

அதில், நான் பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட பெண் பேசுகிறேன். இனிமேல் எந்த பெண்ணும் இதுபோல பாதிக்கப்படக் கூடாது.

ஆளுங்கட்சி பிரமுகர் ஒருவரிடம் தான் இது குறித்து முதலில் கூறினோம். அவர் தான் காவல்துறை உயர் அதிகாரிகள் மூலம் நடவடிக்கை எடுக்க வைத்தார்.

எனக்கு அந்த ஆளும்கட்சி பிரமுகர் கொடுத்த வாக்கு என்னவென்றால், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட பெண் நான் தான் என்பதும் என் குடும்பத்தைப் பற்றிய தகவலும் வெளிவராது என்று சொல்லியிருந்தார்

ஆனால் தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டவுடன் இந்த செய்தி அரசியலாக்கப்பட வேண்டும் என்பதற்காக வெளியில் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கில், ஆளுங்கட்சியைச் சேர்ந்தவங்க யாருமே இல்லை.

இதை அரசியல் ஆக்காமல், தயவுசெய்து நடவடிக்கை எடுக்குமாறு எல்லோர்கிட்டேயும் நான் கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன்.

இந்த விஷயத்தினால் நானும் எனது குடும்பமும் மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறோம்

அரசியல் ஆதாயத்திற்காக சில பேர் செய்யும் செயல் என்னையும் என் குடும்பத்தையும் தற்கொலை செய்யத் தூண்டுகிறது என கூறியுள்ளார்.

ஆனால் இந்த ஆடியோ உண்மையானது தானா என சமூகவலைதளத்தில் விவாதம் கிளம்பியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்