எங்களுக்கும் அக்கா.... தங்கை இருக்கிறார்கள்: பொள்ளாச்சி விவகாரத்தில் வேதனையடையும் வெளிநாடு வாழ் தமிழர்கள்

Report Print Deepthi Deepthi in இந்தியா

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியில் பள்ளி, கல்லூரி மாணவிகளையும், வசதி படைத்த குடும்ப பெண்களையும் கும்பல் ஒன்று பாலியல் துன்புறுத்தல் செய்துள்ள சம்பவம் தமிழகம் மட்டுமின்றி வெளிநாட்டு வாழ் தமிழ்களையும் பாதித்துள்ளது.

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட திருநாவுக்கரசு மற்றும் அவனது கூட்டாளிகள் சபரிராஜன், சதீஸ், வசந்தகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் பொள்ளாச்சி சம்பவம் வேதனையை ஏற்படுத்துகிறது என வெளிநாட்டு வாழ் தமிழர்கள் தெரிவித்துள்ளனர்.

வெளிநாட்டு தமிழர்கள் பகிர்ந்துகொண்டதாவது, சமூகவலைதளங்களில் பழகிய பெண்கள் ஒருவரை நம்பி இவ்வளவு தூரம் போனாலும், எதற்காக இப்படி தண்டனை வழங்குகிறார்கள்.

இது கொடூரத்தின் உச்சகட்டமாகஉ ள்ளது, பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்ந்து நடந்துகொண்டுதான்இருக்கிறது. ஆனால் அதற்கான நீதி இன்னும் பெண்களுக்கு கிடைக்கவில்லை என திவ்யா கூறியுள்ளார்.

துபாயில் இருந்து பிரவோ கூறியதவாது, நான் கோயம்புத்தூரை சேர்ந்தவன், எனது ஊரில் இப்படி நடைபெற்றுள்ளதா என நினைக்கையில் மிகவும் வேதனையாக இருக்கிறது.

எனக்கும் அக்கா, தங்கைகள் இருக்கிறார்கள். இப்படியெல்லாம் சம்பவங்கள் நடைபெறும் அவர்களை வெளியில் அனுப்பவும் அச்சமாக இருக்கிறது. தண்டனைகள் அதிகமானால் குற்றங்கள் குறையும் , எனவே இவர்களுக்கு அதிக தண்டனை வழங்க வேண்டும் என கூறியுள்ளார்.

நந்தினி கூறியதாவது, பெண்கள் என்றாலே உணர்வுபூர்வமானவர்கள். பொள்ளாச்சி விவகாரத்தில் குற்றவாளிகளுக்கு கொடுக்கும் தண்டனை வைத்து, இனி எந்த ஆம்பளையும் பெண்களை நிமிர்ந்து பார்க்ககூடாது என கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...