வெளிநாட்டில் போய் பாருங்க..இதுக்கு அனுமதி கொடுங்க? பொள்ளாச்சி பாலியல் பலாத்கார விவகாரத்தில் பிரபல நடிகையின் ஆவேச வீடியோ

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் பலாத்கார விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில், பிரபல திரைப்பட நடிகையான சிந்து விபச்சாரத்தை சட்டப்படி ஆக்குங்கள், அப்போவாது இருக்கிற பெண்கள் தப்பிப்பார்கள் என்று ஆவேசத்துடன் கூறியுள்ளார்.

பொள்ளாச்சியில் 200-க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் பலாத்காரம் செய்துள்ள விவகாரம் தமிழக மக்களிடம் ஒரு வித பயத்தையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

அந்த குற்றவாளிகளை எல்லாம் உயிரோடு விடக்கூடாது, மரணதண்டனை தான் சரியானது என்ற குரலும் எழுந்து வருகிறது.

இந்நிலையில் அங்காடி தெரு நடிகை வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அதில், வணக்கம் நான் ஒன்னும் புதுசா பேச போறது இல்லை. அந்த காலம் மாதிரி இந்த காலம் கிடையாது. டிக்டாக் திறந்தா என்ன அநியாயம் நடந்தாலும் வந்துடுது.

பேஸ்புக் திறந்தா என்ன அநியாயம் நடந்தாலும் வந்துடுது. யூ-டியூப் போனா வந்துடுது. எல்லாத்தையும் பார்த்துக்கிட்டு நமக்கென்னன்னு சும்மா போக முடியவில்லை. நம்மால முடிஞ்சது எதிர்த்து குரல்தான் தர முடியும்? வேறென்னங்க பண்ண முடியும்?

மிருக நாய்கள்., இன்னும் கேவலமாக கூட அவங்களை பேசலாம். அவனுங்கள பேசி நான் இமேஜ் கம்மி பண்ணிக்க முடியாது. 4 வயசு குழந்தைங்கள கூட ரேப் பண்றானுங்க. இவனுங்க உயிரோட இருக்கணுமா? வெளிநாட்டில் போய் பாருங்க, ஒரு பொண்ணை கற்பழித்தால் நடுரோட்டில வெச்சு துண்டு துண்டா வெட்றாங்க. இந்த மாதிரி இந்தியாவுல ஏன் சட்டத்தை கொண்டு வர முடியவில்லை.

பம்பாயில விபச்சாரமே நடக்குது.. அங்க இந்த மாதிரி கற்பழிப்பு நடக்குதா? இங்க மட்டும் பாருங்க... ஏதாவது ஒரு மூலையில பொண்ணு கற்பழிக்கப்படறது நடக்குது என்று தொடர்ந்து ஆவேசமாக பேசியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்