தமிழக மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய சம்பவம்.. 200 பெண்களின் வாழ்க்கையில் விளையாடியது 4 பேர் மட்டுமா?

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் பாலியல் பலாத்கார விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், இந்த சம்பவத்தில் நான்கு பேர் மட்டும் தான் சம்பந்தப்பட்டுள்ளார்களா என்ற கேள்வி மக்களிடையே எழுந்துள்ளது.

பொள்ளாச்சியில் பெண்களை பாலியல் பலாத்கார செய்த கும்பலை சேர்ந்த நான்கு பேர் பொலிசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட சில மணி நேரங்களிலே 200-க்கும் மேற்பட்ட பெண்களை இவர்கள் பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாகவும், இதன் பின்னணியில் அரசியல் கட்சிகளின் வாரிசுகள் இருப்பதாகவும் கூறப்பட்டது.

ஆனால் கோவை மாவட்ட எஸ்பி பாண்டியராஜன் அவசரமாக பத்திரிக்கையாளர் சந்திப்பை ஏற்பாடு செய்து, இதன் பின்னணியில் அரசியல் இல்லை தெரிவித்திருந்தார்.

இருப்பினும் மக்களுக்கு இந்த சம்பவத்தில் பல கேள்விகள் எழுந்துள்ளது.

அதில், முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசு என்ற இளைஞன் கைது செய்யப்படுவதற்கு முன் வாட்ஸப் வீடியோவில், பலாத்கார விவகாரத்தில் அரசியல்வாதிகளுக்கு தொடர்பு இருப்பதாக தெரிவித்திருந்தார். அது தொடர்பாக இன்னும் முழுமையாக விசாரணை நடத்தப்படாத நிலையில், அரசியல்வாதிகளுக்கு இதில் தொடர்பில்லை என்று காவல்துறை அவசரமாக அறிவித்து விட்டது ஏன் என்ற கேள்வி எழுகிறது.

இதைத் தொடர்ந்து 200க்கும் மேற்பட்ட பெண்கள் வாழ்க்கையில் விளையாடியது வெறும் நான்கே பேர்தான் என்றால் குழந்தை கூட நம்பாது. ஆனால் 4 பேருடன் விசாரணை வரம்பு முடிவடைந்துவிட்டதே ஏன் என்ற கேள்வியையும் மக்கள் சமூகவலைத்தளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இது போன்ற பல கேள்விகளை மக்கள் எழுப்பி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்