கௌசல்யா சங்கருக்கு துரோகம் செய்துவிட்டார்: சக்தியை இரண்டாவது திருமணம் செய்துகொண்டது எதற்காக?

Report Print Deepthi Deepthi in இந்தியா

உடுமலைப்பேட்டையில் ஆணவப்படுகொலையில் தனது கணவரை இழந்த கௌசல்யா அவரது மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி குமரலிங்கத்தில் அமைக்கபட்ட அறக்கட்டளையை திறந்து வைக்க வந்தபோது பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

தனது கணவர் சங்கரை இழந்த கௌசல்யா சமீபத்தில் சக்தி என்பவரை இரண்டாம் திருமணம் செய்துகொண்டதற்கு சிலர் தரப்பில் ஆதரவும், பலர் தரப்பில் எதிர்ப்பும் நிலவியது.

இந்நிலையில் சங்கரின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, சங்கரின் சொந்த ஊரான குமரலிங்கத்தில் அமைக்கபட்ட அறக்கட்டளை அலுவலகத்தை,திராவிடர் விடுதலை கழக தலைவர் கொளத்தூர் மணி,பெரியார் திராவிடர்கழக பொதுச்செயலாளர் ராமகிருஷ்ணன் ஆகியோர் திறந்து வைத்தனர்.

இங்கு, கௌசல்சயா தனது கணவர் சக்தியுடன் கலந்துகொண்டார். .சங்கா் அறக்கட்டளை திறப்பு விழாவை நடத்த கூடாது என்று கூறி சங்கரின் உறவினா்கள் ஒன்று கூடியதால் பதற்றம் நிலவியது இதனால் திறப்பு விழா நிகழ்ச்சி சிறிது நேரத்தில் முடிக்கப்பட்டு பொதுக்கூட்டம் ரத்து செய்யப்பட்டது.

கௌசல்யா சங்கருக்கு துரோகம் செய்து விட்டு அவர் சார்ந்த சாதி இளைஞரை திருமணம் செய்து கொண்டு பணம் சம்பாதிக்கும் நோக்கில் சங்கா் அறக்கட்டளை தொடங்கியுள்ளார் என உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

பணம் சம்பாதிக்கும் நோக்கில் இந்த அறக்கட்டளை தொடங்கப்பட்டுள்ளதாகவும், கௌசல்யா நாடகம் ஆடுவதாக சங்கரின்உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்