கணவருக்கு இரண்டாம் திருமணம் செய்து வைத்த இளம் மனைவி: அதிரவைக்கும் பின்னணி தகவல்

Report Print Raju Raju in இந்தியா

இந்தியாவில் தனது கணவருக்கு 13 வயது சிறுமியை திருமணம் செய்து வைத்த மனைவியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் கங்காராஜூ (32). இவருக்கு பல்லவி (23) என்ற பெண்ணுடன் நட்பு ஏற்பட்டது. பல்லவி தனது கணவரை பிரிந்து வாழ்ந்த நிலையிலேயே கங்காராஜூவுடன் நட்பானார்.

பின்னர் இருவரும் காதலிக்க தொடங்கிய நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டனர்.

இந்நிலையில் சில வாரங்களுக்கு முன்னர் பல்லவியின் உறவினரான 13 வயது சிறுமி அவர் வீட்டில் வந்து தங்கினார்.

அப்போது கங்காராஜூ சிறுமியிடம் எல்லை மீறியதாக கூறப்படுகிறது.

இந்த விடயம் அந்த பகுதி முழுவதும் தெரியவந்ததையடுத்து பொலிசில் புகார் அளிக்கப்பட்டது.

இதையடுத்து தனது கணவருக்கு ஆபத்து ஏற்பட்டுவிடும் என பயந்த பல்லவி அந்த சிறுமியை கங்காராஜூவுக்கு திருமணம் செய்து வைத்தார்.

இது தொடர்பாக கங்காராஜூ மற்றும் பல்லவி மீது தனி புகார் கொடுக்கப்பட்டது.

இதையடுத்து பொலிசார் சிறுமியை விசாரித்த நிலையில் அனைத்து உண்மைகளையும் அவர் கூறினார். இதை தொடர்ந்து பொலிசார் கங்காராஜூ மற்றும் பல்லவியை கைது செய்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்