பொள்ளாச்சி பாலியல் வழக்கு – பெண்ணின் விவரங்களை வெளிட்ட தமிழ்நாடு உள்துறை..!

Report Print Abisha in இந்தியா

பொள்ளாச்சி விவகாரத்தில் பாதிக்கப்பட்டபெண்ணின் பெயர் கல்வி தகுதி உள்ளிட்ட தகவல்கள் அடங்கிய மனுவை தமிழ்நாடு உள்துறை வெளியிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

சில நாட்களாக பெருமளவில் தமிழர்களை பாதித்தது பொள்ளாச்சி செய்திதான்.

பொதுவாக பெண்கள் குறித்த புகார்களிலும், மனுகளிலும் அவர்கள் பெயர் விவரங்கள் மறைக்கபட வேண்டியது அவசியம் என்று சட்டமாக உள்ளது. இந்நிலையில்பொள்ளாச்சி விவகாரத்தில் பெண்ணின் பெயர் குறிப்பிட்டு தமிழ்நாடு உள்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதில் புகார் அளித்த திகதி பெண்ணின் பெயர்,அவர் படிப்பு தகுதி உள்ளிட்ட தகவல்கள் வெளியிட்டுள்ளது.

பெண்ணின் சகோதரர் பெண்ணின் நிலை குறித்து புகார் அளித்தார். தொடர்ந்து பல வீடியோக்களும் வெளிவந்தன. இந்நிலையில், இது போன்றுஎந்த வீடியோக்கலும் சமூக வளைதளங்களில் பரப்பகூடாதென்று அரசாணைபிறப்பிக்கப்பட்டிருந்தது.

தற்போது இந்த வழக்கில் எந்த தகவலும் வௌியிடப்படகூடாதென்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் அரசு சார்பில் வெளியிடப்பட்டஅறிக்கையில் பெண்ணின் பெயர் இடம் பெற்றுள்ளது பெரும் அளவில் குறிப்பிட்ட பெண்ணை பாதிப்பதாக உள்ளது. மேலும் பலரும் இந்த அரசாணையை தங்கள் சமூகவலைதளங்களில் பரப்பிவருகின்றனர்.

முன்னதாக கோயம்புத்தூர் எஸ்.பி.பாண்டியராஜன் அந்த பெண்ணின் பெயரை வெளியிட்ட நிலையில், அது தவறு என்று மன்னிப்புகோரியிருந்தார். இந்நிலையில் இது மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்