பாஜக-வில் சோனியா காந்தியின் உதவியாளர்

Report Print Fathima Fathima in இந்தியா

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான சோனியா காந்தியின் உதவியாளர் டாம் வடக்கன் இன்று பாஜகவில் இணைந்துள்ளார்.

இந்திய நாடாளுமன்ற தேர்தலுக்கான வேலைகள் படுஜோராக நடந்து வரும் நிலையில் திடீர் திருப்பங்களும் இல்லாமல் இல்லை.

கடந்த காலங்களில் விமர்சனம் செய்த கட்சியுடனே தற்போதைய தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.

இந்நிலையில் சோனியா காந்தியின் உதவியாளரில் ஒருவரான டாம் வடக்கன் இன்று மத்திய அமைச்சர் ரவி சங்கர் முன்னிலையில் பாஜகவில் இணைந்துள்ளார்.

அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்தவர், காங்கிரசில் இருக்கும்பொழுது, அதிகார மையத்தில் இருப்பவர் யாரென்று தெளிவாக தெரியாத சூழ்நிலையில் நான் அதனால் அதிகம் துன்பப்பட்டேன்.

பாகிஸ்தானின் தீவிரவாத தாக்குதலுக்கு காங்கிரசின் எதிர்வினை வருத்தமளிக்கிறது. பிரதமர் மோடியின் வளர்ச்சி குறித்த திட்டங்களில் நம்பிக்கை கொண்டுள்ளேன் என கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்