பிறந்த குழந்தையின் முகத்தை கூட பார்க்க முடியவில்லை: பொள்ளாச்சி நாகராஜ் வேதனை

Report Print Deepthi Deepthi in இந்தியா

பொள்ளாச்சி பாலியல் வழக்கி ஜாமீனில் வெளிவந்துள்ள பார் நாகராஜ், தன்னை குறித்து தவறான தகவல்கள் பரப்பப்படுவதால் பிறந்த குழந்தையின் முகத்தை கூட பார்க்க முடியாத நிலைமைக்கு ஆளாகியுள்ளேன் என கூறியுள்ளார்.

அ.தி.மு.க-வைச் சேர்ந்த இவர் கடந்த சில நாள்களுக்கு முன்பு, அந்தக் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.மேலும் இவரது டாஸ்மாக் கடையை மக்கள் அடித்து உடைக்கும் வீடியோ வெளியானது.

இந்நிலையில் பொள்ளாச்சி பாலியல் சம்பவத்துக்கும், எனக்கும் எந்த தொடர்பும் கிடையாது என நாகராஜ் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.

அரசியல் மற்றும் பொது வாழ்வில் எனக்கு வேண்டாத சிலர் சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்கள் மூலம் என்னைப் பற்றி தவறான தகவல்களைப் பரப்பி வருகின்றனர்.

எனக்கு திருமணமாகி 1 வருடம் ஆகிவிட்டது. குழந்தை பிறந்து 25 நாட்கள் தான் ஆகின்றன. இப்படி ஒரு சம்பவத்தால் எனது குழந்தையின் முகத்தை கூட பார்க்க முடியாத நிலைக்கு ஆளாகியுள்ளேன் என வேதனை தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்